புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

நட்சத்திரங்களுக்கு நடுவில் அமலா பால்… கோலாகலமாக நடந்தது திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்

மைனா திரைப்படம் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.

விஜய், விக்ரம், ஆர்யா, தனுஷ், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இயக்குநர் A.L. விஜய்யை காதலித்து திருமணம் செய்த அமலா பால், பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

விவாகரத்துக்குப் பின்னர் கவர்ச்சியில் தாராளம் காட்டி வந்த அமலா பால், தற்போது தனது நண்பரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். கடந்த மாதம் 26ம் தேதி தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார் அமலா பால்.

அப்போது அவரது நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய், அமலா பாலிடம் தனது காதலை தெரிவித்தார். இதனை எதிர்பார்க்காத அமலா பால், நண்பரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்.

இதனையடுத்து இருவரும் ஜோடியாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிரமில் ஷேர் செய்துள்ளனர்.

“இரண்டு ஆன்மாக்கள், ஒரே பயணம்..” என ரைம்மிங்காக அமலா பாலுடன் திருமணம் ஆனதை இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார் ஜகத் தேசாய்.

இதனையடுத்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அமலா பாலுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அமலா பாலின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content