பொழுதுபோக்கு

மிகப்பெரிய தொகைக்கு விற்றுத் தீர்ந்த GOAT பட வெளிநாட்டு உரிமை.. சூப்பர் அப்டேட்

நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.

இந்தப்படம் மற்றும் தளபதி 69 படங்களுடன் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் முன்னதாக அறிவித்துள்ள நிலையில் GOAT படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் விஜய் வெளிநாட்டில் இருக்கும்படியாக GOAT படத்தின் ஷெட்யூல் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதனிடையே அடுத்த மாதத்தில் விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தினை பிரபல தெலுங்கு பட நிறுவனமான டிவிவி தயாரிக்கவுள்ள நிலையில் படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு அடுத்த மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

GOAT படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் களைகட்டிய நிலையில் வெளிநாட்டு உரிமத்தை அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மிகப்பெரிய தொகைக்கு இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்தின் முக்கியமான அப்டேட் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளதாக அஹிம்சா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில் அது குறித்து தான் இந்த அப்டேட் வெளியாகியுள்ளது.

படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர்த்து படத்தின் டைட்டில் சாங் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் எந்த பாடல் ரிலீசாகும் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content