பொழுதுபோக்கு

ஜெட் வேகத்தில் உயர்ந்த மார்க்கெட்!! வெயிட்டிங் லிஸ்ட்டில் இத்தனை படங்களா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்களும் வெற்றிப்படங்களே.

இதனால் நடிகர் கார்த்தியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.

தற்போது இவரின் ஜப்பான் திரைப்படம் உருவாகி வருகிறது. குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் தான் இப்படத்தை இயக்கி உள்ளார்.

இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜப்பான் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம், 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள கைதி 2, பி.எஸ்.மித்ரனின் சர்தார் 2 என நடிகர் கார்த்தி கைவசம் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தற்போது இந்த பட்டியலில் புது வரவாக இணைந்துள்ள திரைப்படம் தான் லிங்குசாமி இயக்க உள்ள படம்.

நடிகர் கார்த்தி ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் பையா படத்தில் நடித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

பையா படத்தில் இணைந்து பணியாற்றிய கார்த்தி – லிங்குசாமி கூட்டணி தற்போது 13 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதால் அப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் அது பையா படத்தின் 2-ம் பாகமாக இருக்கலாம் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு ஆனால் அவர்கள் இருவரும் இணைய உள்ள படம் பையா 2 இல்லை என்றும், அது புது கதைக்களத்தில் உருவாகும் படம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content