செய்தி விளையாட்டு

அபுதாபி 10 ஓவர் கிரிக்கெட் போட்டி!! தசுன் அதிரடி துடுப்பாட்டம்

அபுதாபி 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று (07) சென்னை பிரேவ்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வங்காள டைகர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வங்களா டைகர்ஸ் அணி 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களா டைகர்ஸ் அணி சார்பாக தசுன் ஷனக 15 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 2 அபாரமான சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளும் அடங்கும்.

குசல் மெண்டிஸ் 15 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் எடுத்தார். பந்துவீச்சில் சென்னை பிரேவ்ஸ் சார்பாக மொஹமட் நபி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய சென்னை பிரேவ்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

சென்னை அணி சார்பில் கேப்டன் சரித் அசங்கா 26 பந்துகளில் 55 ஓட்டகள் எடுத்தார். இதில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.
எனினும் ஆட்ட நாயகன் விருது தசுன் ஷனக்கவுக்கு கிடைத்தது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி