பொழுதுபோக்கு

மகனின் பிறந்தநாளை அஜித் எப்படி கொண்டாடி இருக்கார் பாருங்க…

நடிகர் அஜித்குமார் தன்னுடைய அன்பு மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியபோது எடுத்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்தும், நடிகை ஷாலினியும் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். இருவருமே படித்து வருகின்றனர். அஜித் மகள் அனோஷ்காவுக்கு தற்போது 16 வயது ஆகிறது.

அதேபோல் அஜித்தின் மகன் ஆத்விக்கிற்கு தற்போது 9 வயது ஆகிறது. கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 2-ந் தேதி பிறந்த ஆத்விக், அண்மையில் தனது 9-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடி இருக்கிறார்.

அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். அவர் சென்னையின் எப்சி எனும் கால்பந்து கிளப்பின் ஜூனியர் அணிக்காக விளையாடி வருகிறார். மகனின் ஆசைப்படியே கால்பந்து தீம் உடன் அவரின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் அஜித்.

ஆத்விக்கின் பிறந்தநாளுக்காக வெட்டப்பட்ட கேக்கும் ஃபுட்பால் வடிவில் அமைக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி அலங்காரத்திற்காக ஒட்டப்பட்ட பலூன்களும் புட்பால் போன்றே வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இதுதவிர மகன் பிறந்தநாளுக்காக ஏற்பாடு செய்திருந்த பேனரில், ரொனால்டினோ, டேவிக் பெக்காம் போன்ற கால்பந்து ஜாம்பவான்களுக்கு மத்தியில் ஆத்விக்கின் போட்டோவும் இருக்கும் படி எடிட் செய்து அந்த பர்த்டே பார்ட்டியில் வைத்திருந்தனர்.

அதுமட்டுமின்றி ஃபுட் பால் ஜெர்சி அணிந்தே கேக் வெட்டி இருந்தார் ஆத்விக். மகனின் பிறந்தநாள் பார்ட்டியில் எடுத்த புகைப்படங்களை அஜித்தின் மனைவி ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content