இலங்கை

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, மன்னார், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகக்கூடும் என அறிவிக்க்பபட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இவ்வாறு எதிர்வுகூறியுள்ளது.

குறித்த பகுதிகளில், மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையை காட்டிலும் அதிகரித்து பதிவாகக் கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகூடிய வெப்பநிலை நேற்றைய தினம் குருநாகல் மாவட்டத்தில் பதிவானது.

குறித்த மாவட்டத்தில் 38.5 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை நேற்று பதிவாகியுள்ளது.

மனித உடலின் சராசரி வெப்பநிலையானது 37 பாகை செல்லியஸ் ஆகும்.

எனினும், அதனை காட்டிலும் அதிகூடிய வெப்பநிலை பதிவாவதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content