இலங்கை

இலங்கை மக்களிடம் விசேட கோரிக்கை

இலங்கையில் வீடுகள் அல்லது பணியிடங்களில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த தொடர்பில் கோரியுள்ளது.

சுத்திகரிப்புக்காக நீர் பெறும் ஆதாரங்களில் நீர் வற்றிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வறட்சியான காலநிலையினால் 20 நீர் விநியோக அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் 41 நீர் வழங்கல் கட்டமைப்புகளின் நீர் விநியோகம் குறையக் கூடிய சூழ்நிலை நிலவுகிறதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 409 மீற்றராக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8ஆம் திகதி 411 மீற்றர் மட்டத்தில் நீர் காணப்பட்ட போதிலும், நீர்மின் உற்பத்தி காரணமாக இரண்டு நாட்களில் நீரின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்