இலங்கை

கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்!

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற குடும்பஸ்தர் மீதே நேற்று (01) கரடி தாக்கியுள்ளது.

கரடியின் தாக்குதலுக்கு உள்ளான குறித்த குடும்பஸ்தர் கண் ஒன்றை இழந்துள்ளதுடன், தலையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

கரடியின் பிடியில் இருந்து தப்பி வந்த அவரை அயலவர்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content