ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 24 மணிநேரம் இடைவிடாமல் ஓடும் விநோதப் போட்டி

பிரித்தானியாவில் 35 ஆண்டுகளாக 24 மணிநேரத் தொடர் ஓட்டப்போட்டி ஒன்று நடைபெறுகின்றது.

இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 42 பேர் பங்குபெற்றதாகக் கூறப்பட்டது. அவர்களில் 84 வயதான மூதாட்டியே மிக அதிக வயதுடையவராகும். அவர் 19 ஆண்டுகளாக இந்தப் போட்டியில் கலந்துகொள்கிறார்.

போட்டி முடியும் வரை இடைவேளை ஏதும் இருக்காது. போட்டியாளர்கள் நீர் அருந்துவதையும் சாப்பிடுவதையும்கூடத் தொடர்ந்து ஒடியவாரே செய்கின்றனர்.

சற்றும் ஓய்வின்றி ஓடுவதால் சிலர் காயங்களாலும் உடல் நலக் குறைவாலும் பாதியிலேயே விலகவும் நேரிடுகிறது. கடுமையான உடல் வலி, சோர்வு இவற்றைச் சற்றும் பொருட்படுத்தாமல் 29 போட்டியாளர்கள் இவ்வாண்டு போட்டியை முடித்துள்ளனர்.

போட்டியை முடித்தவர்களால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. கோப்பைகள் அவர்கள் இருந்த இடத்திற்குக் கொண்டுவந்து கொடுக்கப்பட்டன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி