இலங்கை செய்தி

அர்ஜென்டினா படைகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது ஈரான்

அர்ஜென்டினாவின் கடற்படை மற்றும் விமானப்படையை பயங்கரவாத அமைப்புகளாக ஈரான் அறிவித்துள்ளது.

அர்ஜென்டினாவின் கடற்படை மற்றும் விமானப்படையை பயங்கரவாத அமைப்புகளாக ஈரான் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) பயங்கரவாத அமைப்பாக அர்ஜென்டினா அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து, ஈரானின் புரட்சிகர காவல்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் நடவடிக்கையை அர்ஜென்டினா முன்னெடுத்திருந்தது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், பரஸ்பர நடவடிக்கை என்ற அடிப்படையில் அர்ஜென்டினாவின் விமானப்படை மற்றும் கடற்படையை பயங்கரவாத அமைப்புகளாகக் கருதுவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கையால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அர்ஜென்டினா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. எனினும், அர்ஜென்டினாவின் தரைப்படை குறித்து அந்த அறிக்கையில் எவ்விதக் குறிப்பும் இடம்பெறவில்லை.

லெபனானைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவளிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அர்ஜென்டினா, அதன் காரணமாகவே கடந்த ஏப்ரல் மாதம் ஈரானின் புரட்சிகர காவல்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது.

1994ஆம் ஆண்டு அர்ஜென்டினா தலைநகர் புவனஸ் அயர்ஸில் அமைந்துள்ள யூத சமூக மையமான AMIA மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பே காரணம் என அர்ஜென்டினா குற்றஞ்சாட்டி வருகிறது.

அர்ஜென்டினா வரலாற்றில் மிக மோசமான தாக்குதலாகக் கருதப்படும் இந்தச் சம்பவத்தில் 85 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

ஈரானின் புரட்சிகர காவல்படை என்பது அந்நாட்டின் ஷியா முஸ்லிம் மதகுருமார்களின் ஆட்சியைப் பாதுகாக்கும் முக்கிய இராணுவப் பிரிவாகும். அத்துடன், ஈரானின் பொருளாதாரத்தின் பெரும் பகுதிகளிலும் இந்தப் படை செல்வாக்குச் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை