ஐரோப்பா

பிரித்தானியாவில் முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பிரித்தானியாவில் வீட்டு திட்டம் பற்றிய புதிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது லைஃப்டைம் ஐஎஸ்ஏ’ (Lifetime ISA – LISA) திட்டத்திற்குப் பதிலாக, ‘முதல்முறை வீடு வாங்குபவர்களுக்கான ஐஎஸ்ஏ’ (First Time Buyer ISA) என்ற புதிய திட்டத்தைக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்.

ஜான் ஹீலி (John Healey) தனது முதல் நிதிநிலை அறிக்கையில், ‘இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில்,  ‘லைஃப்டைம் ஐஎஸ்ஏ’-வில் இருந்த அபராதக் கட்டண முறை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நீங்கள் வாங்க விரும்பும் வீட்டின் விலை நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பை விட அதிகமாக இருந்தாலும், நீங்கள் முதலீடு செய்த தொகையை முழுமையாகத் திரும்பப் பெற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

‘முதல்முறை வீடு வாங்குபவர்களுக்கான ஐஎஸ்ஏ’ திட்டம் 2029 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும்.

இது ‘லைஃப்டைம் ஐஎஸ்ஏ’-வின் சிறப்பம்சங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும்; அதாவது, ஆண்டுக்கு 4,000 பவுண்டுகள் வரை முதலீடு செய்யலாம் மற்றும் அதற்கு அரசாங்கத்தின் சார்பில் 25 சதவீத போனஸ் வழங்கப்படும்.

மேலும், “தகுதியுடைய முதல் வீட்டை வாங்குவதற்காகப் பணத்தை எடுக்கும்போது, ​​கணக்கில் உள்ள மொத்தத் தொகைக்கு (4,50,000 பவுண்டுகள் மதிப்பு வரை) இந்த போனஸ் வழங்கப்படும்.

இதனால், பணத்தை எடுக்கும்போது எந்தவித அபராதக் கட்டணமும் விதிக்கப்படாது. இந்த புதிய திட்டத்தில் வயது வரம்பு ஏதுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 4,50,000 பவுண்டுகள் என்ற ‘லைஃப்டைம் ஐஎஸ்ஏ’ உச்ச வரம்பை விட அதிக விலையுள்ள வீடுகளை வாங்குபவர்களுக்கு, பணத்தை எடுக்கும்போது விதிக்கப்படும் அபராதக் கட்டணம் 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்