இராணுவத்தினருக்கு அச்சுறுத்தல் – காசாவை தொடர்ந்து தாக்கும் இஸ்ரேல்
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் மூ குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
காசா நகரின் மேற்கில், இடம்பெயர்ந்த குடும்பங்கள் நிறைந்த பகுதியான கதிபா அருகே, இன்று இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் இஸ்ரேல் குறைந்தது 12 ஏவுகணைகளை வீசியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அசாதாரணமான கடுமையான குண்டுவீச்சில், இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதேநேரம் இரண்டு வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு இருந்த அச்சுறுத்தல்களை அகற்றும் நோக்கில் இந்த தாக்குதல்களை முன்னெடுத்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.




