உலகம் செய்தி

சுரினாமில் நடந்த கத்தி குத்து தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 9 பேர் மரணம்

Partially burnt body of young woman recovered in Jharkhand

தென் அமெரிக்க நாடான சுரினாமின்(Suriname) தலைநகர் பரமரிபோவில்(Paramaribo) நடந்த கத்தி குத்து தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அவரது சொந்த குழந்தைகளில் நான்கு பேர் அடங்குவர் என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அவரது 11 வயது மகளை அவர்களின் வீட்டின் சமையலறையில் 44 முறை குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சந்தேக நபர் தனது மனைவியுடன் தொலைபேசியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணை மூலம் அறியப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளை கூர்மையான பொருளால் தாக்கியதால் சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது என்று காவல்துறை தெரிவித்துள்ளது

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி