நேபாள அனர்த்தத்தில் சிக்கிய 85 அமெரிக்கர்கள் மாயம் – தொடரும் மீட்பு முயற்சி
நேபாளத்தில் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி 85 அமெரிக்கர்கள் உட்பட 4,200-க்கும் மேற்பட்டோர்இன்னும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன அமெரிக்கர்களில் பெரும்பாலானோர், கைலாஷ் மலைக்கு ஆன்மீக யாத்திரை செல்வதற்காக இமயமலைக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
இதுவரை ஒன்பது அமெரிக்கக் குடிமக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
எஞ்சியவர்களை தேடும் பணிகளை காத்மாண்டு மற்றும் பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் ஒருங்கிணைத்து வருகின்றன.
இதற்கிடையே நேபாளத்திற்கு முழுமையான மத்திய அரசின் ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்தார்.
மேலும், தேவைப்படும் எந்தவொரு வளங்களையும் கொண்டு உதவ தனது நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.




