ஐரோப்பா

ஸ்பெயின் ரயில் விபத்தில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த 06 வயது சிறுமி!

ஸ்பெயின் ரயில் விபத்தில் சிக்கி ஏறக்குறைய 41 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 06 வயது சிறுமி ஒருவர் தனது மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாட்ரிட் (Madrid) நகரில் லயன் கிங் (Lion King) இசை நாடகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்  இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

இதில் மேற்படி சிறுமியின் பெற்றோர், 12 வயதுடைய அண்ணன் மற்றும் உறவினர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி தலையில் அடிப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பின் தற்போது நலமாக உள்ளதாக கூறுப்படுகிறது.

மேலும் தற்போது இந்த சிறுமி தாத்தா, பாட்டியுடன் கோர்டோபாவில் (Cordoba) உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

ஸ்பெயின் ரயில் விபத்து – இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உடல்கள்!! மீட்கமுடியாமல் தவிப்பு!

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்