பாகிஸ்தானில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
பாகிஸ்தானில் இன்று காலை 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
35 கிலோமீட்டர் (22 மைல்கள்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் எவ்வித உயிரழப்புகளும் ஏற்படவில்லை என்றும், ஏனைய சேதங்கள் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகளின் மோதல் மண்டலத்தில் பாகிஸ்தான் அமைந்துள்ளதால், உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்தத் தட்டுகளின் தொடர்ச்சியான இயக்கம், இப்பகுதி முழுவதும் அடிக்கடி நிலநடுக்கங்களைத் தூண்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.




