22 ஆவது திருத்தச்சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை சட்டத்திருத்தம் ஆகியவற்றை வர்த்தமானியில் அறிவிப்பதற்கும் பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
நீதிமன்ற சுயாதீனத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை சட்டத்திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டது
குறித்த சட்டமூலங்கள் அரசியலமைப்பிற்கு அமைவானவை என சட்ட மாஅதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலங்களை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு நேற்றைய அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.




