ஆப்கானிஸ்தானில் தரைவழித் தாக்குதல்களை தொடங்கியது பாகிஸ்தான் -29 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தரைவழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது
இந்த தாக்குதல்களில் 29 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் மோதல் போக்கு தற்போது தீவிரமடைந்து வருகின்ற நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்லாமாபாத் ஒரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதாக பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரார் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் படைகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களின் விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
“பக்தியா, பக்திகா மற்றும் குனார் ஆகிய இடங்களில் உள்ள மூன்று இலக்குகள் துல்லியமான தாக்குதல்களின் போது அழிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




