இலங்கை செய்தி

“தமிழக் கட்சிகள் ஒன்றிணையாவிடின் வடக்கு பிறபோகும்”

  • May 16, 2026
  • 0 Comments

“தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையெனில், வடக்கு – கிழக்கு மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது.” – இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசு தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்கள் ஆதரவு குறைவதற்கு முன்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்தி, […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி பலி! போர் நிறுத்தத்துக்கு மத்தியில் பதற்றம்!!

  • May 16, 2026
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பின் மிக உயரிய இராணுவத் தளபதியான Izz al-Din al-Haddad , இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இதனை ஹமாஸ் அமைப்பு இன்று உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காசாவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் Izz al-Din al-Haddad உடன் அவரது குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஒக்டோபர் 7 தாக்குதல்களுக்கு முக்கியக் காரணமானவர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர், இஸ்ரேலியப் படைகளால் நீண்டகாலமாகத் தேடப்பட்டு […]

உலகம்

தாய்லாந்தில் ரயிலுடன் மோதிய பேருந்து – பாரிய தீவிபத்தில் பலர் பலி!

  • May 16, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் ரயில் ஒன்றுடன் பயணிகள் பேருந்து ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்து இன்று நிகழ்ந்துள்ளது. இதில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினால் அருகில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களும் தீவிபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் பணியாற்றி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   […]

செய்தி தமிழ்நாடு

“நன்மை மலரட்டும்” முதல்வரை சந்தித்தார் கமல்!

  • May 16, 2026
  • 0 Comments

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், தமிழக முதல்வர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார். தமிழக முதல்வருக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன், சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார். இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழக முதல்வர் தம்பி விஜய்யை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழகத்தை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் […]

செய்தி தமிழ்நாடு

செங்கோட்டையனுக்கு நிதியமைச்சுப் பதவி – முதல்வரால், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

  • May 16, 2026
  • 0 Comments

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித் துறையும், ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் மற்றும் 09 அமைச்சர்கள் கடந்த 10vஆம் திகதி பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முதல்வர் விஜய்யின் வசம் பொது நிர்வாகம், உள்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், காவல் உள்ளிட்ட துறைகள் உள்ளன. மேலும், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய […]

இந்தியா

200 யூனிட் இலவச மின்சாரம் : சுற்றறிக்கை வெளியீடு!

  • May 16, 2026
  • 0 Comments

இரு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மென்பொருளில் செயல்படுத்தப்பட்ட புதிய கூடுதல் மானிய விதிமுறை குறித்து அதிகாரிகள், பணியாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதேவேளை இலவச மின்சாரம் குறித்து தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி தமிழ்நாடு

விஜய்க்கு ‘ஐஸ்’: சீமானுக்கு ‘மிளகாய்’! தமிழகத்திலும் வேலை காட்டும் அர்ச்சுனா!

  • May 16, 2026
  • 0 Comments

தமிழக அமைச்சர் ராஜ்மோகனை, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (16) சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சி சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் இதன்போது கலந்துரையாடினர் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் தமிழ் மொழிச் சார்ந்த முன்னெடுப்புகள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் அவரது கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களும் […]

இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவுப் பதாகையை அகற்றியது பொலிஸ்!

  • May 16, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் கட்டப்பட்டிருந்த நினைவுப் பதாகையை பொலிஸார் அகற்றியுள்ளனர். சுப்பர்மடம் பகுதியில் எதிர்வரும் 18ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக, பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய, “மே 18 இனத்தின் வலி! மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!!” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை ஒன்றினை மக்கள் கட்டியிருந்தனர். இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் சிவில் உடையில் அங்கு […]

உலகம் செய்தி

தடைகள் மற்றும் போர் அழுத்தத்தில் தத்தளிக்கும் ஈரான் பொருளாதாரம்

  • May 16, 2026
  • 0 Comments

பல தசாப்தங்களாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள சர்வதேச தடைகளால் ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் போர் சூழ்நிலை, அந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் புள்ளிவிபரவியல் மையம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 53.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. புள்ளிக்கு புள்ளி பணவீக்கம் 17.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. குறிப்பாக சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை 375 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரானிய நாணயத்தின் […]

உலகம் செய்தி

ஈரான் போர் விவகாரத்தில் உடன்பாடு இன்றி முடிந்த பிரிக்ஸ் மாநாடு

  • May 16, 2026
  • 0 Comments

பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு இந்தியாவின் புதுடில்லியில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. ஆனால், ஈரான் தொடர்பான போர் விவகாரத்தில் உறுப்புநாடுகள் ஒருமித்த முடிவை எட்டவில்லை. மாநாட்டின் இறுதி அறிக்கையில், உறுப்புநாடுகளுக்கு இடையில் “கருத்து வேறுபாடுகள்” தொடர்வதாக மட்டும் குறிப்பிடப்பட்டது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்பான மோதல் குறித்து தெளிவான ஒருமித்த நிலைப்பாடு எடுக்க முடியாத இரண்டாவது தொடர்ச்சியான பிரிக்ஸ் மாநாடாக இதுவும் அமைந்துள்ளது. இந்த மாநாடு இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தலைமையில் […]