200 யூனிட் இலவச மின்சாரம் : சுற்றறிக்கை வெளியீடு!
இரு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மென்பொருளில் செயல்படுத்தப்பட்ட புதிய கூடுதல் மானிய விதிமுறை குறித்து அதிகாரிகள், பணியாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இதேவேளை இலவச மின்சாரம் குறித்து தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




