உலகம்

கலிபோர்னியாவில் இருந்து 40 ஆயிரம் பேர்  வெளியேற்றம்!!

  • May 23, 2026
  • 0 Comments

தெற்கு கலிபோர்னியாவில்  இரசாயண தொட்டியொன்று  எப்போது வேண்டுமானாலும் செயலிழக்கும் அல்லது வெடிக்கும் நிலையில் உள்ளதாக  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வசித்து வந்த  40 ஆயிரம் பேர்  வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் குறித்த தொட்டியில் இருந்து புகை வெளியேறியதை தொடர்ந்து தீயைணைப்பு துறைக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடதிற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தற்காலிகமாக நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர். இருப்பினும் அந்த தொட்டி பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது […]

உலகம்

கட்டுக்கடங்காமல் பரவும் எபோலா தொற்று : திணறும் காங்கோ அரசு!

  • May 23, 2026
  • 0 Comments

உகாண்டாவில் புதிதாக மூன்று பேர் எபோலா தொற்றால் பாாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 05 ஆக உயர்ந்துள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசில், புண்டிபுக்யோ வகை எபோலாவின் தாக்கத்தால் ஏறக்குறைய 82 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேநேம் 177 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  கிட்டத்தட்ட 750 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைச்சகம் இந்த நோய்ப் பரவலை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அவசரநிலையாக  அறிவித்துள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவில் பரவி வரும் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் சாத்தியமான தாக்குதல் : இரகசிய கூட்டுப் பயிற்சியில் நேட்டோ நாடுகள்!

  • May 23, 2026
  • 0 Comments

நேட்டோவின் இங்கிலாந்து தலைமையிலான கூட்டு விரைவு எதிர்வினைப் படை (ARRC), நேசப் படைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பயிற்சி ஒன்றை நடத்தியுள்ளது. இந்த பயிற்சிக்காக பயன்பாட்டில் இல்லாத சேரிங் கிராஸ் சுரங்கப்பாதை தளம் இரகசிய முகாமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டு பயிற்சிற்கு ‘ஆபரேஷன் ஆர்கேட் ஸ்ட்ரைக்’  (Operation Arcade Strike ) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன்போது  ரஷ்யாவிற்கு எதிராக ‘ஆழ்கடல் தாக்குதல்’ நடவடிக்கைகளை உருவகப்படுத்தும் வகையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. […]

இந்தியா

தீ விபத்துக்கான சமிக்ஞை : ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

  • May 23, 2026
  • 0 Comments

பெங்களுருவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லியை நெருங்கிக் கொண்டிருந்தபோது அவசர நிலையை அறிவித்தது. விமானத்தின் என்ஜின் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதற்கான சமிக்ஞைகள் தெரிவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முழுமையான அவசர நிலை அறிவிக்கப்பட்டது. 171 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர்பஸ் A320 ரக விமானம் பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம்   முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.    

இந்தியா செய்தி தமிழ்நாடு

கோவை சிறுமி வன்கொடுமை சம்பவம்: கடும் நடவடிக்கைக்கு முதல்வர் உத்தரவு!

  • May 23, 2026
  • 0 Comments

கோவையில் சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். “கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.” என தனது எக்ஸ் தள பக்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளார். தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் […]

அரசியல் இலங்கை செய்தி

13 ஐ முழுமையாக அமுலாக்க ஆதரவு: கனடா தூதுவரிடம் சஜித் உறுதி!

  • May 23, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், இலங்கைக்கான கனடா தூதுவர் Isabelle Catherine Martin ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனநாயக ஆட்சி, மனித உரிமை மற்றும் இன நல்லிணக்கம் தொடர்பாக இரு தரப்பினரும் இதன்போது கலந்துரையாடினர். மாகாண சபை தேர்தலை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதியான அரசியல் அர்ப்பணிப்பை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தினார். இலங்கையின் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அடை மழை: 17 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு: மூவர் பலி!

  • May 23, 2026
  • 0 Comments

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 17 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 17 ஆயிரத்து 736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவர் உயிரிழந்துள்ளனர்.357 வீடுகள் பகுதியளவும், 8 வீடுகள்முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 57 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 912 பேரும், கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 569 குடும்பங்களைச் […]

அரசியல் இலங்கை செய்தி

சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு தமிழரசுக் கட்சியும் வலியுறுத்து!

  • May 23, 2026
  • 0 Comments

இலங்கை ரூபாவின் பெறுமதி சரிவு உட்பட பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராய்வதற்காக அனைத்து கட்சி குழு கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் நேற்று (22) நாடாளுமன்றத்தில் வலியுறுத்தின. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கயந்த கருணாதிலக்கவும், தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் நாடாளுமன்றக்குழுத் தலைவருமான சாணக்கியனுமே இந்த கோரிக்கையை விடுத்தனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று முன்தினம் அனைத்து எதிரணிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டத்திலும், சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

உலகம் செய்தி

ஈரானின் கோரிக்கைகளை ட்ரம்ப் கட்டாயம் ஏற்க வேண்டும்!

  • May 23, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஈரானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Reza Talaei-Nik எச்சரித்துள்ளார். ஈரானிய மக்களின் உரிமைகளை அமெரிக்கா அங்கீகரிக்கத் தவறினால், அது அந்நாட்டிற்கு மேலும் பல தோல்விகளை மட்டுமே தரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய மோதல்களில் இருந்து அமெரிக்கா தப்பிக்க வேண்டுமானால், அது போர்க்களத்திலும் இராஜதந்திர ரீதியிலும் ஈரானின் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். இந்த மோதலைத் தொடர்வது […]

உலகம்

அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெற கட்டுப்பாடு : ட்ரம்பின் புதிய அறிவிப்பு!

  • May 23, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற விரும்பும் வெளிநாட்டினர், தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி அங்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சர்ச்சைக்குரிய உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. சட்டப்பூர்வ குடியேற்றத்தை மேலும் கடினமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த எதிர்பாராத உத்தரவால் அமெரிக்கக் குடிமக்களைத் திருமணம் செய்தவர்கள், வேலை மற்றும் மாணவர் விசா வைத்திருப்பவர்கள், அகதிகள் மற்றும் அரசியல் தஞ்சம் கோருபவர்கள் உள்ளிட்டோர் […]