உலகம்

கலிபோர்னியாவில் இருந்து 40 ஆயிரம் பேர்  வெளியேற்றம்!!

தெற்கு கலிபோர்னியாவில்  இரசாயண தொட்டியொன்று  எப்போது வேண்டுமானாலும் செயலிழக்கும் அல்லது வெடிக்கும் நிலையில் உள்ளதாக  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வசித்து வந்த  40 ஆயிரம் பேர்  வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த தொட்டியில் இருந்து புகை வெளியேறியதை தொடர்ந்து தீயைணைப்பு துறைக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடதிற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தற்காலிகமாக நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் அந்த தொட்டி பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது வாயு கசிவோ அல்லது புகை மண்டலமோ இல்லை என்றாலும், தொட்டி “தீவிர நெருக்கடியில்” இருப்பதாகவும், அதை பாதுகாக்க முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்