கட்டுக்கடங்காமல் பரவும் எபோலா தொற்று : திணறும் காங்கோ அரசு!
உகாண்டாவில் புதிதாக மூன்று பேர் எபோலா தொற்றால் பாாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 05 ஆக உயர்ந்துள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில், புண்டிபுக்யோ வகை எபோலாவின் தாக்கத்தால் ஏறக்குறைய 82 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேநேம் 177 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 750 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் உலக சுகாதார அமைச்சகம் இந்த நோய்ப் பரவலை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அவசரநிலையாக அறிவித்துள்ளது.
கட்டுப்படுத்த முடியாத அளவில் பரவி வரும் இந்த புதிய திரிபுக்கு தடுப்பூசியோ, சிகிச்சையோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே காங்கோவில் பணிபுரிந்த அமெரிக்க பிரஜையொருவருக்கு எபோலா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் மற்றொரு அமெரிக்கர் செக் குடியரசுக்கு மாற்றப்பட்டுள்ளார்.




