உலகம்

ஓமான் வளைகுடாவில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்!

  • June 5, 2026
  • 0 Comments

ஓமான் வளைகுடாவில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் கடற்படை எச்சரிக்கை ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் வீசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானிடமிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பெறுவதற்கு வொஷிங்டனுக்கு அந்நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் தேவையில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் இந்தச் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே  அமெரிக்கக் கடற்படை கடல்வழிப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவும், வர்த்தகக் கப்பல்களைக் கைப்பற்றுவதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதேபோல், ஓமான் தனது மினா அல் ஃபஹால் முனையத்திற்கு அருகே ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து, […]

இலங்கை

இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் மே 2026-ல் 6,873 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஏப்ரல் மாதத்தில் 6,766 மில்லியன் டொலராக இருந்த கையிருப்பு,  மே மாதத்தில் 1.6 சதவீதம் அதிகரித்து 6,873 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட அந்நிய செலாவணி மாற்று வசதியின் கையிருப்புகளும் இந்த கையிருப்பு அதிகரிப்பில் அடங்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உலகம்

சீனாவில் கண்ணாடி அணிந்து பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு எச்சரிக்கை!

  • June 5, 2026
  • 0 Comments

சீனாவில் தேசிய பல்கலைக்கழக நுழைவுத் பரீட்சைகளில் தோற்றும் மாணவர்கள் ஸ்மார்ட் கண்ணாடிகள் பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கண்ணாடி அணிந்து பரீட்சைக்கு தோற்றுவோர் விசேடமாக கவனிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்தி மோசடி செய்வதைத் தடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள பல்கலைக்கழக நுழைவு பரீட்சையில் சுமார் 13 மில்லியன் மாணவர்கள் தோற்றவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குவாங்டாங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட பல […]

ஐரோப்பா செய்தி

இஸ்ரேலின் இரு அமைச்சர்களுக்கு பயணத்தடை விதித்தது அயர்லாந்து!

  • June 5, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் முக்கிய இரு அமைச்சர்கள் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு அயர்லாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது. அமைச்சர்களான Itamar Ben-Gvi மற்றும் Bezalel Smotrich ஆகியோருக்கே இவ்வாறு நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இவர்களின் வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் மற்றும் மனிதாபிமானமற்ற அணுகுமுறைகளே இந்தத் தீர்மானத்திற்குக் காரணம் என்று அயர்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பாலஸ்தீனியர்களை முற்றிலும் வெளியேற்ற முற்படும் இவர்களின் இனப்படுகொலை நோக்கம் கொண்ட கருத்துகளை அயர்லாந்து வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கனவே பல நாடுகள் இந்த […]

உலகம்

AIஐக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் போதுமானதாக இல்லை – பேராயர் அதிருப்தி!

  • June 5, 2026
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும் தற்போதைய விதிமுறைகள் முற்றிலும் போதுமானதாக இல்லை என கேன்டர்பரி பேராயர் டேம் சாரா முல்லாலி (Dame Sarah Mullally) தெரிவித்துள்ளார். “பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை சாட்பாட்கள் இப்போது எளிதாக்குவதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார். டர்ஹாம் பல்கலைக்கழக அறிக்கையை மேற்கோள் காட்டி, சாட்பாட்கள் கற்பழிப்பு மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பாத்திரமேற்புகளை எளிதாக்குகின்றன என்ற கவலைகளை அவர் சுட்டிக்காட்டினார். இந்த பாதிப்புகள் பயனர்களின் தவறான பயன்பாட்டினால் மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவு தளங்களின் […]

ஐரோப்பா

நெதர்லாந்தில் போதைமருந்து கொடுக்கப்பட்டு பல பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்!

  • June 5, 2026
  • 0 Comments

நெதர்லாந்தில் போதைமருந்து கொடுக்கப்பட்டு பல பெண்கள்  துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட  சம்பவம் பூதாகாரமாக வெடித்துள்ள நிலையில், 04 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் இருந்து கணினிகள், தொலைபேசிகள் மற்றும் தரவு சேமிப்பு சாதனங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்த வழக்கில் இன்னும் நிறையபேர் கைது செய்யப்படலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நெதர்லாந்தில் உள்ள பல பெண்களுக்கு, அவர்களின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள ஒருவரால் போதை மருந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். டச்சு தனியுரிமை விதிகளுக்கு […]

ஐரோப்பா கல்வி

பாலஸ்தீன கொடியை அகற்ற ஸ்லோவேனியாவின் புதிய பிரதமர் உத்தரவு!

  • June 5, 2026
  • 0 Comments

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் புதிய வலதுசாரி அரசாங்கம் பொறுப்பேற்றவுடன், அந்நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது முன்னாள் பிரதமர் Robert Golob பாலஸ்தீனத்தை அங்கீகரித்து அந்நாட்டின் கொடியை ஏற்றியிருந்த நிலையில், புதிய பிரதமர் Janez Jansa அதனை அகற்ற உத்தரவிட்டுள்ளார். காசா மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஸ்லோவேனியா நாட்டின் முந்தைய அரசு கடுமையாக விமர்சித்து ஆயுதத் தடையையும் விதித்திருந்தது. ஆனால் புதிய பிரதமர் அந்த முடிவுகளை தலைகீழாக மாற்றத் திட்டமிட்டுள்ளார். இந்த அரசியல் […]

உலகம் செய்தி

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் தகவல்!

  • June 5, 2026
  • 0 Comments

இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “பல ஆண்டுகளாக அமெரிக்காவை இந்தியா சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக இறக்குமதி வரிகளை விதித்தது. எனினும், அமெரிக்கா பதிலுக்கு எதையும் செய்யவில்லை. நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது. இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதன் மூலம் தற்போது அமெரிக்கா அதிக பணம் சம்பாதிக்கின்றது. இந்தியாவுடன் ஓர் […]

உலகம்

இரசாயன ஆயுத பயன்பாடு : சிரியாவில் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தல்!

  • June 5, 2026
  • 0 Comments

சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பிரச்சினை குறித்து அனைத்துத் தரப்பினரும் விரைவில் ஒரு இறுதித் தீர்ப்பை எட்ட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. சீனத் தூதர் சன் லெய், நேற்று  ஐ.நா. பாதுகாப்பு சபையில் உரையாற்றும்போது இந்த கருத்தினை முன்வைத்தார். இரசாயன ஆயுதத் தடை அமைப்பு தனது தொழில்முறை அதிகாரத்திற்கு ஏற்ப செயல்பட்டு, அதன் தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார். எந்தவொரு நாடு, அமைப்பு அல்லது தனிநபர் எந்தச் சூழ்நிலையிலும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதை […]

இலங்கை செய்தி

86 வன ஒதுக்கீடுகளை பிரகடனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை!

  • June 5, 2026
  • 0 Comments

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, “காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (05) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. அனைத்து உயிரினங்களினதும் இருப்பை உறுதி செய்யும் நிலையான சுற்றுச்சூழலை நோக்கமாகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் கொள்கைக்குள், சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் சூழலுக்கும் இடையில் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில், ஆரோக்கியமான சமூகம் மற்றும் சமநிலையான சூழலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நிலையான வளர்ச்சிப் கட்டமைப்பிற்குள் […]