ஐரோப்பா செய்தி

வடகொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் : ஸ்டாமரின் அறிவிப்பால் சலசலப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

பிரித்தானியா வடகொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதாக பிரதமர் ஸ்டாமர் அறிவித்ததை தொடர்ந்து கொமன்ஸ் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. கொமன்ஸ் அவை இன்று ஆரம்பமாகிய நிலையில், பிரதமர் ஸ்டாமர் லிபரல் டெமாக்ரட் தலைவர் சர் எட் டேவிக்கு ( Sir Ed Davey) பதிலளித்துக்கொண்டிருந்தார். இதன்போது தனது அரசாங்கம் பல்வேறு நாடுகளுடன் செய்துள்ள ஒப்பந்தங்களை அவர்பட்டியலிட்டார். இந்நிலையில் தென்கொரியாவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தங்களை பட்டியலிடுவதற்கு பதிலாக வடகொரியாவின் பெயரை அறிவித்தார். இதனால் சபையில் சிலமணிநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இலங்கை செய்தி

வாழைச்சேனை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

  • May 20, 2026
  • 0 Comments

கிராமப்புற வீதி நிர்மாணம், குடிநீர் விநியோகம் மற்றும் திடக்கழிவுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (20) முற்பகல் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான நீர் வழங்கல் திட்டங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இணைந்து […]

உலகம்

உலகம் காட்டுமிராண்டித்தனமான சட்டங்களுக்குத் திரும்பும் அபாயத்தில் உள்ளது – ஷி ஜின்பிங!

  • May 20, 2026
  • 0 Comments

உலகம் காட்டுமிராண்டித்தனமான சட்டங்களுக்குத் திரும்பும் அபாயத்தில் உள்ளதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளார். சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள புட்டின் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை இன்று சந்தித்தார். இதன்போது இரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் நாடுகளின் உறவு குறித்து அன்பான வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டனர், மேலும் மூலோபாய உறவுகளை ஆழப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் இருநாட்டு தலைவர்களும் நட்புறவு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நீட்டிக்க முறைப்படி ஒப்புக்கொண்டனர். வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலில் இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஷி […]

உலகம்

சீனாவில் உணவகம் ஒன்றில் கத்தி குத்து தாக்குதல் – ஜப்பானிய பிரஜைகள் இருவர் காயம்!

  • May 20, 2026
  • 0 Comments

சீனா – ஷாங்காயில் (Shanghai) உள்ள உணவகம் ஒன்றில் நேற்று கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த  தாக்குதலில் இரண்டு ஜப்பானிய ஆண்களும் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, தாக்குதல்தாரி 59 வயதுடையவர் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா (Minoru Kihara) சம்பவம் குறித்து சீன அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளார். இதேவேளை இந்த சம்பவம் குறித்த விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை செய்தி

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் கையளிப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் காண்பதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். இதற்கு இணையாக, பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்தப் புதிய நூலகக் கட்டிடத்தில், சிறுவர்களுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப […]

இலங்கை

கச்சத்தீவு இலங்கையின் சொத்து : உண்மைக்கு புறம்பான விடயங்களை பேச வேண்டாம்!!

  • May 20, 2026
  • 0 Comments

கச்சத்தீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்துவிட வேண்டும். இல்லையேல்,  தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக போராட தயங்க மாட்டோம் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனப் பிரதிநிதி செல்லதுரை நற்குணம் தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் மீனவர் பிரச்சினை முக்கிய இடம்பிடித்துள்ளதுடன், விஜய் கச்சத்தீவை மீட்பது பற்றி அறிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பில் நேற்று  யாழில் உள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் […]

இந்தியா உலகம் செய்தி

இரு தரப்பு உறவு வலுவடையும்: இந்தியா, இத்தாலி பிரதமர்கள் உறுதி!

  • May 20, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் ஆழப்படுத்துவதற்கு இரு நாடுகளின் பிரதமர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். அதன்பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். “இந்தியா- இத்தாலி உறவு முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் விரிவடைந்து தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, ஒரு சுமூகமான நட்பிலிருந்து சுதந்திரம், ஜனநாயகம், எதிர்காலத்துக்கான ஒரு பகிரப்பட்ட […]

உலகம் செய்தி

போரால் இஸ்ரேல் விமான நிறுவனத்துக்கு பேரிழப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

ஈரான் மீதான போர் நடவடிக்கைகளின் காரணமாக, இஸ்ரேலின் தேசிய விமான சேவை நிறுவனமான ‘எல் அல்’ (El Al) கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. போர்ச் சூழல் காரணமாக வான்வெளிகள் மூடப்பட்டதால், வணிக ரீதியிலான பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் விளைவாக, நடப்பு ஆண்டின் முதலாவது காலாண்டில் மட்டும் ‘எல் அல்’ நிறுவனம் சுமார் 67 மில்லியன் டாலர் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியின் லாபத்துடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் தற்போதைய வருவாய் 27 […]

ஆஸ்திரேலியா செய்தி

ஐஎஸ் பெண்கள் விவகாரம்: உதவ மறுக்கும் ஆஸ்திரேலிய அரசு!

  • May 20, 2026
  • 0 Comments

ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் சில ஆஸ்திரேலிய பெண்கள், இன்னும் சில நாட்களில் சிரியாவிலிருந்து தாயகம் திரும்பக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இவ்வாறு நாடு திரும்ப உத்தேசித்துள்ள குழுவினருக்கு அரசாங்கம் எந்தவொரு உதவியையும் வழங்காது என்று ஆஸ்திரேலிய பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தற்போது சிரியாவின் ‘அல்-ரோஜ்’ அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இவர்களை, சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் வரை 10 மணித்தியாலங்கள் தரைவழியாக அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. டமாஸ்கஸிற்குச் சென்றடைந்த பின்னர், […]

இந்தியா செய்தி

செப்டம்பரில் இந்தியா வருகிறார் புடின்!

  • May 20, 2026
  • 0 Comments

BRICS நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வருகின்றார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. குறித்த அமைப்பின் 2026-ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பு இந்தியா வசம் உள்ளது. இந்நிலையில் மே 14ஆம் திகதி பிரிக்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. […]