ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவை சீர்குலைக்கும் ஈரானின் எந்த முயற்சியும் சகித்துக்கொள்ளப்படாது

  • May 5, 2026
  • 0 Comments

பிரித்தானிய சமூகத்தை சீர்குலைக்க ஈரான் மேற்கொள்ளும் எந்த முயற்சியையையும் சகித்துக்கொள்ள முடியாது என பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். டவுனிங் ஸ்ட்ரீட்-இல் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார். வடக்கு லண்டன் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் யூத-எதிர்ப்பை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பிரதமர் இந்த மாநாட்டில் உரையாற்றினார். கடந்த புதன்கிழமை கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரண்டு யூத ஆண்கள் கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகினர். அதே […]

செய்தி தமிழ்நாடு

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் நாளை மறுதினம் பதவியேற்பு

  • May 5, 2026
  • 0 Comments

தவெக தலைவர் விஜய் நாளை மறுதினம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறப்படுகின்றது. இதேவேளை தவெக சட்டமன்றக் குழு தலைவராகவும் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி […]

இந்தியா

காங்கிரஸுடன் கூட்டணி : த.வெ.க எடுக்கப்போகும் முடிவு என்ன?

  • May 5, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக்கழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் தனிப் பெரும்பான்மை இல்லாதமையால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதுடன், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது. தற்போது த.வெ.க ஆட்சியமைக்க 10 இடங்கள் தேவை. இதனைப் பெற கூட்டணி அமைக்கும் முயற்சியில் அக்கட்சி தலைவர் விஜய் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தால் ஆட்சி அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சிகளும் அதற்கு […]

ஐரோப்பா

யூத சமூகத்தைப் பாதுகாக்க கூடுதல் ஏற்பாடு – ஸ்டாமர் அறிவிப்பு!

  • May 5, 2026
  • 0 Comments

யூத சமூகத்தைப் பாதுகாப்பதற்காகக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். டவுனிங் தெருவல் இடம்பெற்ற வட்டமேசை மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய இராச்சியத்தில் யூத-எதிர்ப்பைத் தூண்டக்கூடிய ஒரு காரணியாக ஈரான் உள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பிரிட்டிஷ் சமூகத்தில் வன்முறை, வெறுப்பு அல்லது பிளவுகளைத் தூண்டுவதற்கு ஈரான் அல்லது பிற நாடுகள் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் பொறுத்துக்கொள்ளப்படாது என்றும், அவை விளைவுகளைச் சந்திக்கும் என்றும் பிரதமர் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தவெக சட்டமன்றக்குழு தலைவராக விஜய் தெரிவு!

  • May 5, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றக்குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற தவெக எம்எல்ஏக்களை விஜய் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஆட்சியமைப்பது தொடர்பிலும் ஆலோசனை நடந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து, அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். அதேவேளை, விஜய் […]

உலகம் செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை!

  • May 5, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்தின் UAE சிவிலியன் கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் Shehbaz Sharif வன்மையாகக் கண்டித்துள்ளார். பிராந்தியத்தில் நிலையான அமைதியை நிலைநாட்ட, இருதரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தான், இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் பேச்சுவார்த்தைக்கான சூழலைச் சிதைப்பதாகக் கவலை வெளியிட்டுள்ளார். அதேவேளை, நிலைமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்க இரு நாடுகளும் தொடர்ந்து […]

அரசியல் இலங்கை செய்தி

மலையக தமிழர்களுக்கு காணி உரிமை வழங்குமாறு சிறிதரன் எம்.பி. சபையில் வலியுறுத்து!

  • May 5, 2026
  • 0 Comments

“நீலகாமம் தோட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப்பெற வேண்டும். மலையக மக்களுக்கு நில உரிமை வழங்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” இரத்தினபுரி மாவட்டம், காவத்தை – நீலகாமம் தோட்டத்தில் கூலிக்காக அமர்த்தப்பட்ட காடையர்களால் தொழிலாளியின் குடியிருப்பு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த மூவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை […]

உலகம்

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து – 21 பேர் பலி!

  • May 5, 2026
  • 0 Comments

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில்   21 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  61 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரின் லியுயாங் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. களத்தில்  சுமார் 500க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகில் வெடிமருந்து கிடங்குகள் இருந்ததால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக தொழிற்சாலையின் நிர்வாகிகளைப் […]

உலகம் செய்தி

ஈரான் முழுமையாக அழிக்கப்படும்: ட்ரம்ப் ஆவேசம்!

  • May 5, 2026
  • 0 Comments

அமெரிக்க கப்பல்கள்மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்தநாடு முழுமையாக அழிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களை மீட்பதற்கான ‘Project Freedom’ என்ற நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே அமெரிக்கக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்த நாடு முழுமையாக அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். சமீபத்திய மோதல்களில் ஈரானிய படகுகள் மற்றும் ஏவுகணைகளை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். […]

உலகம் செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறது அமெரிக்கா: ஈரான் குற்றச்சாட்டு!

  • May 5, 2026
  • 0 Comments

போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா அந்தப் பகுதியில் தடையை விதித்துள்ளதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாத சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஈரான் இன்னும் தனது எதிர்ப்பைத் தீவிரமாகத் தொடங்கவில்லை என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.