இலங்கை

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து – 21 பேர் பலி!

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில்   21 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  61 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரின் லியுயாங் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

களத்தில்  சுமார் 500க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகில் வெடிமருந்து கிடங்குகள் இருந்ததால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக தொழிற்சாலையின் நிர்வாகிகளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!