‘வெனிசுலாவில் பேரழிவை தரும் மரணங்கள்’
வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கப் பேரழிவு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலநடுக்கங்கள் “மிகப் பெரிய அளவில் ஏற்பட்டு, பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெனிசுலாவிற்கு உதவி செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என்றும், இதற்காக அமெரிக்க அரசு நிறுவனங்களை தயாராக இருக்குமாறு தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“எங்களுடைய புதிய மற்றும் சிறந்த நண்பர்களுக்காக நாங்கள் உறுதியாகத் துணை நிற்போம். ஆரம்பகட்ட தகவல்கள் எதுவும் சாதகமாக இல்லை ” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க ராணுவ நடவடிக்கையின் மூலம் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டுள்ள சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேவேளை, 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.




