போர் நிறுத்த முயற்சிகள் – கட்டார் பிரதமருடன் ஈரானின் வெளியுறவு அமைச்சர் பேச்சு
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் குறித்து கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இஸ்லாமாபாத்திற்கு திரும்புவதற்கு முன்னதாக நடைபெற்ற இந்த உரையாடலில், போர் நிறுத்த முன்னேற்றங்களும் அதை வலுப்படுத்துவதில் உள்ள சவால்களும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதற்றத்தை குறைத்து, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஈரான் மேற்கொண்டு வரும் இராஜதந்திர முயற்சிகள் குறித்தும் அராக்சி விளக்கியுள்ளார்.
இந்நிலையில், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்த நிலைமைகள் இன்னும் தெளிவாக இல்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, அராக்சி இஸ்லாமாபாத்திலிருந்து புறப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது தூதுதர்களின் பயணத்தை ரத்து செய்துள்ளார்.





