இலங்கை செய்தி

” உலக பொருளாதாரத்துக்கும், மனித இருப்புக்கும் அச்சுறுத்தல்”

  • March 3, 2026
  • 0 Comments

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காக மிக விரைவில் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்தச் சூழ்நிலை உலகப் பொருளாதாரத்திற்கும், மனித வாழ்வின் இருப்புக்கும் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் என்ற வகையில் சிறந்ததை எதிர்பார்க்கும் அதேவேளை, மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளவும் தயாராகி வருவதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று (02) விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி அநுர […]

இந்தியா செய்தி

போர் பதற்றத்தால் இந்திய பொருளாதாரம் அழுத்தத்தில்

  • March 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால், இந்திய பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற சூழல், இந்தியா போன்ற கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான நீடித்த மோதல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இந்திய அரசின் நிதிநிலைக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்து கிடைக்கும் வருவாயும் குறைந்தால் இந்திய பொருளாதாரத்தைப் பாதிக்கலாம் […]

இலங்கை செய்தி

205 விமான சேவைகள் இரத்து

  • March 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக இதுவரை 205 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்துள்ளார். விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை குறித்து அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்படி நாட்டுக்கு வரவிருந்த 107 விமானங்களும் புறப்படவிருந்த 98 விமானங்களுமாக மொத்தம் 205 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் தங்கியுள்ள […]

புகைப்பட தொகுப்பு

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் – இணையத்தில் வைரல்

  • March 3, 2026
  • 0 Comments

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் திருமண நிகழ்வின் புகைப்படங்களை இருவரும் பகிர்ந்த நிலையில் இரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் திருமண கொண்டாட்ட நிகழ்வுகளை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.    

இலங்கை செய்தி

இலங்கை வருமாறு பாப்பரசருக்கு அழைப்பு!

  • March 3, 2026
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வத்திக்கானில் நாடுகளுடனான உறவுகளுக்கான துணைச் செயலாளர் மிஹைட்டா பிளாஜ் அருட் தந்தையை(Msgr. Mihăiță Blaj) சந்தித்து இந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழை கையளித்தார்.

ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தத்தில் கவனம் செலுத்துமாறு லிபரல் அரசாங்கத்திடம் கோரிக்கை

  • March 3, 2026
  • 0 Comments

ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தத்தில் அதிக கவனம் செலுத்துமாறு லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் துணைத் தலைவர் டெய்ஸி கூப்பர் (Daisy Cooper), ஐரோப்பாவுடன் சிறந்த வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் பெறுவதில் அரசு முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியம் இடையே புதிய சுங்க ஒன்றியத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கும் நோக்கத்தை அரசு அறிவித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வசந்த கால பொருளாதார அறிக்கை வெளியீடு

  • March 3, 2026
  • 0 Comments

அரசாங்கம் நாட்டிற்கான சரியான பொருளாதாரத் திட்டத்தைக் கொண்டுள்ளது என நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார் வசந்த கால அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நிச்சயமற்ற உலக சூழ்நிலையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்துள்ளோம் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிக்கையில் 2026 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சற்று மெதுவாக வளர்ச்சியடையும் என்றும் 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வசந்த கால […]

இலங்கை செய்தி

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் மிகப்பெரிய வீழ்ச்சி

  • March 3, 2026
  • 0 Comments

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் ஆயிரத்து 290.68 புள்ளிகள் அல்லது 5.44 சதவீதத்தால் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 22,443.38 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய மொத்தப் புரள்வு 9.56 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு – என்ன காரணம் தெரியுமா?

  • March 3, 2026
  • 0 Comments

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய கிழகில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எழுந்துள்ள நெருக்கடியான நிலைமையைக் கருத்திற் கொண்டு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பேணுவதற்கும் இடையூறுகளை தடுப்பதற்காகவும் பொலிஸ்மா அதிபரால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, தூதரகங்கள், […]

இலங்கை செய்தி

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

  • March 3, 2026
  • 0 Comments

நாட்டில் இன்று தங்கத்தின் விலை 15 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்க பவுணொன்று 4 லட்சத்து 25, ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம பவுண் ஒன்று 3 லட்சத்து 93 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 53,125 ரூபாவுக்கும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.