அமெரிக்காவின் போர் நடவடிக்கை தீவிரமடைந்தால் பிரித்தானியாவுக்கு பெரும் சவால்
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் தீவிரமடைந்தால், அது பிரித்தானியாவுக்கு புதிய பாதுகாப்பு சவால்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சைப்ரஸில் அமைந்துள்ள பிரித்தானிய ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி (Akrotiri) அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்ற கவலை எழுந்துள்ளது. இந்தநிலையில் மத்திய கிழக்கில் பிரித்தானிய படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக கட்டாருக்கு டைபூன் (Typhoon) போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரியிலிருந்து ஆறு F-35 போர் விமானங்களும் […]













