செய்தி

கடைசி குண்டு தீரும்வரை போராடுவோம்: ஈரான் பிரதி அமைச்சர் டெல்லியில் கருத்து!

  • March 6, 2026
  • 0 Comments

“கடைசி குண்டு தீரும்வரை, கடைசி வீரர் இருக்கும்வரை ஈரான் போராடும். அதைவிட வேறு வழியில்லை.” என்று ஈரான் பிரதி வெளிவிவகார அமைச்சர் சயீத் கத்தீப்சாதே Saeed Khatibzadeh தெரிவித்தார். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், டெல்லியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். “ அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்களை தாக்கி, ஆக்கிரமிப்பு நடத்தி வருகின்றன. ஈரானுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த மேற்படி நாடுகள் முயற்சிக்கின்றன. எனது நாட்டின் குடிமக்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் குண்டுகளை வீசி தாக்குதல்களை […]

உலகம்

எப்ஸ்டீன் விவகாரத்தை திசைத் திருப்பவே இந்த போர் நாடகம் : உலக தலைவர்கள் குற்றச்சாட்டு!

  • March 6, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள முக்கிய தலைவர்களை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கிய ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புக்களை மறைப்பதற்காக அல்லது திசைத்திருப்புவதற்காக நிகழ்த்தப்படும் ஒரு நாடகமே ஈரான் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. நியூயார்க் ஜனநாயகக் கட்சி பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் (Alexandria Ocasio-Cortez) பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) கோப்புகள் தொடர்பான விசாரணைகளை மழுங்கடிக்கும் ஒரு செயற்பாடே ஈரான் மீதான இந்த தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளின் நேரம் […]

உலகம்

லெபனானின் எல்லைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு வெளியேற்ற உத்தரவு!

  • March 6, 2026
  • 0 Comments

லெபனானின்  எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு ஹெஸ்பொல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த வெளியேற்ற எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஹெஸ்பொல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை. ல்லைக் கோட்டிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள அனைத்து குடியிருப்புகளையும் நீங்கள் காலி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐரோப்பா

ஈரானை அழிக்க அமெரிக்காவிற்கு நேசக்கரம் நீட்டும் உக்ரைன்!

  • March 6, 2026
  • 0 Comments

ஈரானின் ட்ரோன்களை அழிக்க அமெரிக்கா உக்ரைனின் உதவியை நாடியுள்ளது. மத்திய கிழக்கில் ஈரானிய ட்ரோன்களை எதிர்த்துப் போராடுவதில் அமெரிக்காவிடமிருந்து ஆதரவு கோரிக்கையைப் பெற்றுள்ளதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைனில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை உக்ரைன் நிபுணர்களுடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். உக்ரைன் பல ஆண்டுகளாக ரஷ்ய தயாரிப்பான ஷாஹெட் ட்ரோன்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது, மேலும் “நமது பாதுகாப்பை உறுதிசெய்து நமது மக்களின் உயிரைப் பாதுகாக்க உதவும் கூட்டாளர்களுக்கு உக்ரைன் உதவுகிறது” என்று அவர் மேலும் கூறியுள்ளார். […]

உலகம்

ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் உக்கிர தாக்குதல்! தொடரும் பதற்றம்!!

  • March 6, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் லெபனான்மீதான வான் வழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கமைய தெஹ்ரானில் உள்ள முக்கிய அரசு கட்டமைப்புகள் மற்றும் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய இராணுவம் குண்டு மழை பொழிந்துவருகின்றது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க படைகள் வரலாற்று சிறப்புமிக்க ஒருங்கிணைப்பை வழங்குகின்றது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எதிரிகளின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தளங்களை சிதைப்பதே தங்களின் முதல் கட்ட நோக்கம் என்றும் கூறியுள்ளது. ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்திவருகின்றது. […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பு வாவியில் உலா வரும் காட்டு யானைகள்

  • March 6, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு வாவியில் இரண்டு காட்டு யானைகள் ஜோடியாக நேற்று மாலை வேளயிலிருந்து (05.03.2026) உலாவித் திரிவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். மட்டக்களப்பு வாவியின் துறைநீலாவணை பகுதியிலேயே இக்காட்டு யானைகள் உலாவித்திரிவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு வாவியில் உலாவும் காட்டு யானைகளை அப்பகுதி மக்கள் பார்வையிட்டு வருவதுடன், தமது குடியிருப்புக்களுக்குள் உட்புகுந்து விடுமோ என்ற அச்சத்தின் மத்தியிலும் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் துவம்சம் செய்து வந்த காட்டுயானைகள் அண்மைக்காலமாக மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து எழுவாங்கரைப் […]

செய்தி

வெனிசுலா பாணியில் ஈரானில் புதிய தலைவர்: ட்ரம்ப் வியூகம்!

  • March 6, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் நடந்தது போல, ஈரானிலும் புதிய தலைவர் நியமனத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் புதிய உச்ச தலைவராக கமெனியின் 2-வது மகன் மொஜ்தபா கமெனி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை ஏற்க முடியாது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் […]

செய்தி

பக்தர்களுடன் கடலில் மூழ்கியது படகு: இருபர் பலி: யாழில் பெரும் சோகம்!

  • March 6, 2026
  • 0 Comments

யாழ்.கடற்பரப்பில் படகொன்று இன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐவர் மீட்கப்பட்டு யாழ்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பிரதேச மக்கள், மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். யாழ். குருநகர் இறங்குத்துறையில் இருந்து கிளிநொச்சி பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க பக்தர்களை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. படகில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலர் பயணித்துள்ளனர் என தெரியவருகின்றது. இதுவரை மூன்று பேர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். […]

இலங்கை செய்தி

சாய்ந்தமருது பகுதியில் கடலில் மூழ்கியது மீன்பிடி இயந்திரப் படகு!

  • March 6, 2026
  • 0 Comments

இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகொன்று கடலில் மூழ்கியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சாய்ந்தமருது பிரதேச கடல் பகுதியில் இச் சம்பவம் வியாழக்கிழமை(5) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த படகினை மீட்டு கடற்கரைப் பகுதிக்கு இழுத்து கொண்டு வருவதற்கான முயற்சிகள் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மூழ்கிய படகு சுமார் ஒரு கோடிக்கும் மேல் பெறுமதியானதுடன் கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுக்கப்பட்டது. கடற்படையின் உதவியும் […]

உலகம்

ஏவுகணை தாக்குதல்: குவைத்திலுள்ள தூதரகத்தை மூடியது அமெரிக்கா!

  • March 6, 2026
  • 0 Comments

குவைத்தில் உள்ள தமது நாட்டு தூதுரகத்தை அமெரிக்கா மூடியுள்ளது. அங்கிருந்து அனைத்து பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தூதரகத்தில் உள்ள ரகசியத் தரவுகள் மற்றும் கோப்புகளை முழுமையாக அழிக்குமாறு தூதரக ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குவைத் வான்பரப்பில் ஊடுருவிய ஏவுகணைத் தாக்குதலை அந்த நாட்டு இராணுவம் முறியடித்ததைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வான்வழித் தாக்குதலால் சில வாகனங்கள் சேதமடைந்தாலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்கா தனது பணியாளர்களின் […]