இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீடிப்பு: நாடாளுமன்றம் ஒப்புதல்!

  • March 6, 2026
  • 0 Comments

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை Parliament மீண்டும் அங்கீகரித்துள்ளது. அவசரகாலச்சட்டத்தை நீடித்து ஜனாதிபதி Anura Kumara Dissanayake வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அளிக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்தை அடுத்து இன்று மாலை சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவசரலகாலச்சட்டத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக 108 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக, 08 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதனால் 100 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இலங்கை செய்தி

500 லீற்றர் மண்ணெண்ணையை பதுக்கிய நபர் கைது

  • March 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே மண்ணெண்ணெய் பதுக்க முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மண்ணெண்ணையை பதுக்க பயன்படுத்திய லொறியும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 07 பில்லியனை கடந்தது

  • March 6, 2026
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதன் முறையாக 7,000 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. அண்மைக்கால தரவு அறிக்கைகளின்படி, 2026 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 7,284 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்டது. இது 2026 ஜனவரி மாதத்தில் காணப்பட்ட 6,832 மில்லியன் டொலர் கையிருப்புடன் ஒப்பிடுகையில் 6.6 சதவீத அதிகரிப்பாகும். வெளிநாட்டு செலாவணி கையிருப்பு, 2026 […]

இலங்கை செய்தி

வடக்கு – கிழக்கு கல்வி மேம்பாட்டிற்கு ஜப்பான் நிதியுதவி

  • March 6, 2026
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கல்வித்துறை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், மனிதப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் ஜப்பானிய அரசாங்கம் 32 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது. கிளிநொச்சியில் புதிய சிறுவர் அபிவிருத்தி நிலையம் ஒன்றை அமைத்தல் மற்றும் காத்தான்குடி பகுதியில் போஷாக்கு உணவு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வு, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ இசொமடா (Akio Isomata) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. […]

இலங்கை செய்தி

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்கு தூதரகம் விசேட அறிவிப்பு

  • March 6, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு விழிப்புடன் இருக்குமாறு இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளை அமெரிக்கத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. தனது சமூக ஊடகப் பக்கத்தில் தூதரகம் இதனை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் தெரிவித்திருப்பது,“அருகிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அல்லது தூதரக அலுவலகத்திலிருந்து உடனுக்குடன் பாதுகாப்புத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு, http://step.state.gov என்ற இணையதளத்தில் ‘ஸ்மார்ட் டிராவலர் என்ரோல்மென்ட்’ (STEP) திட்டத்தில் பதிவு செய்யுமாறு அனைத்து அமெரிக்கப் பிரஜைகளையும் ஊக்குவிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், […]

இலங்கை செய்தி

இலங்கையில் ஈரானிய கப்பல் பயணிகளுக்கு அடைக்கலம்: ஜனாதிபதிக்கு ரிஷாட் பாராட்டு

  • March 6, 2026
  • 0 Comments

ஈரான் கப்பலில் இருந்த 208 பேருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்மானம் மேற்கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானத்தின் மூலம் ‘மனிதாபிமானமே எதிலும் முதன்மையானது’ என்பதை – அவர் நிரூபித்துள்ளார் என்றும், இது – இலங்கையர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் தருணம் எனவும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார். ”மத்திய கிழக்கில் நடந்து கொண்டிருக்கும் யுத்தம் – […]

அரசியல் இலங்கை செய்தி

அவசரகாலச்சட்டம் நீடிப்பு: சஜித் அணி போர்க்கொடி!

  • March 6, 2026
  • 0 Comments

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதை தமது கட்சி கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் SJP நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல J.C. Alawatthuwala தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” இச்சட்டத்தை நீடிக்க வேண்டிய எவ்விதத் தேவைப்பாடும் நாட்டில் இல்லை. இது தொடர்பாக ஆளுங்கட்சியால் முன்வைக்கப்பட்ட காரணங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. எனவே, அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதன் பின்னணியில் வேறு […]

உலகம்

ஈரான் உளவாளிகள் நால்வர் லண்டனில் கைது!

  • March 6, 2026
  • 0 Comments

ஈரான் உளவுத் துறையுடன் தொடர்பு வைத்துள்ளனர் எனச் சந்தேகிக்கப்படும் நால்வர் லண்டனில் London கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானியர் ஒருவரும், பிரிட்டிஷ் மற்றும் ஈரான் குடியுரிமை கொண்ட மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள யூத சமூகத்தினர் மற்றும் அவர்களின் இருப்பிடங்களைக் இவர்கள் கண்காணித்து வந்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதன் ஓர் அங்கமாக Watford மற்றும் Barnet உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே கைது இடம்பெற்றுள்ளது. […]

செய்தி

யாழ்.படகு விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு பணிப்பு!

  • March 6, 2026
  • 0 Comments

யாழ். படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் Ramalingam Chandrasekar இது தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். விபத்துக்குள்ளான படகு பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, […]

உலகம்

போர் பதற்றத்தால் வழிபாட்டுத் தலங்கள் மூடல்!

  • March 6, 2026
  • 0 Comments

புனித ரமழான் மாதத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமிலுள்ள அல்-அக்ஸா மசூதியில் (Al-Aqsa Mosque) இன்று (6) நடைபெறவிருந்த ஜும்மா தொழுகைக்கு இஸ்ரேலிய சிவில் நிர்வாகம் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மேற்கொண்டு வரும் பதில் தாக்குதல்களைக் கருத்திற் கொண்டே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரிகேடியர் ஜெனரல் ஹிஷாம் இப்ராஹிம் (Hisham Ibrahim) தெரிவித்துள்ளார். இதேவேளை, அல்-அக்ஸா மசூதி மாத்திரமன்றி, பழைய ஜெருசலேம் நகரிலுள்ள மேற்கு சுவர் (Western Wall) மற்றும் திருக்கல்லறை […]