உலகம் செய்தி

ஈரான் உச்ச தலைவர் தாக்குதலுக்கு இலக்கானாரா – அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

  • March 13, 2026
  • 0 Comments

ஈரான் தொடர்பான அண்மைய பதற்றநிலை குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் Pete Hegseth முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். ஈரானின் புதிய உச்ச தலைவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், அவர் காயமடைந்திருக்கலாம் அல்லது கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா, ஈரானின் ஏவுகணை திறனை குறைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், அவர்கள் ஏவுகின்ற ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அழித்து வருகிறோம் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது. மேலும் புதிய ஏவுகணைகள் உருவாக்கும் திறன் அவர்களிடம் இல்லாமல் […]

இலங்கை செய்தி

15 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

  • March 13, 2026
  • 0 Comments

நாட்டின் 15 மாவட்டங்களில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தென், வட மத்திய மற்றும் வடல் மாகாணங்களிலும், மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிப்புறச் செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்வதுடன், அதிகளவில் நீர் அருந்துமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

பெய்ரூட்டில் வீசப்பட்ட இஸ்ரேல் துண்டுப்பிரசுரங்கள் – லெபனான் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

  • March 13, 2026
  • 0 Comments

லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் இன்று பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வீசியுள்ளது. இந்த பிரசுரங்களில் QR குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. குறியீடுகள் WhatsApp மற்றும் Facebook போன்ற சமூக தளங்களுடன் இணைந்து, ஆட்சேர்ப்பு முகவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வழிவகுக்கிறது. இந்நிலையில் இந்த குறியீடுகளை ஸ்கேன் செய்வதில் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. காரணம், இதன் மூலம் கையடக்கத்தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் மீறப்படக்கூடும், சட்டப்பொறுப்பு மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் ஏற்படலாம் என லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள், பொதுமக்கள் […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு மோதல் – ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அவசர கூட்டம்

  • March 13, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (13) நண்பகல் அமைச்சில் இடம்பெற்றுள்ளது. மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வாக, ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு […]

உலகம் செய்தி

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு தாக்குதல் எச்சரிக்கை – மொஜ்தபா கமெனி காயமடைந்தாரா?

  • March 13, 2026
  • 0 Comments

ஈரானின் புதிய உச்ச தலைவராக கருதப்படும் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei) மீது தாக்குதல் இடம்பெறலாம் என இஸ்ரேல் ( Israel) எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் இடம்பெற்ற போதிலும் , மொஜ்தபா கமெனி காயமடைந்தாரா அல்லது அவரது குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்பதற்கான உறுதியான ஆதாரம் இதுவரை வெளியாகவில்லையென கூறப்படுகிறது. தெஹ்ரான் தனது ஆளுமையை வலுப்படுத்த முயற்சித்திருப்பதால், அரசு புதிய தகவல்களை வெளியிடுவதற்கான வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கர்கள் […]

உலகம் செய்தி

ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் மரணப் பொறி: லெபனானில் உக்கிர தாக்குதல்!

  • March 13, 2026
  • 0 Comments

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை முடக்கும் நோக்கில் இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த நாட்டின் தலைநகரம் Beirut மற்றும் முக்கியப் பகுதிகளில் உள்ள ஆயுதக் கிடங்குகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தப் போர் நடவடிக்கையால் லெபனானில் சுமார் எட்டு லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பெரும் மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். அதேவேளையில், ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்க இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்கள் […]

இலங்கை செய்தி

‘தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு’: வழக்கு ஒத்திவைப்பு!

  • March 13, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் சுமார் நாலரை மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கில் இடையீட்டு எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்திருக்கின்ற விண்ணப்பத்தின் மீதான விசாரணைக்காகவே வழக்கு ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழ்க்காளியும் ஏனைய எதிராளிகளும் இது தொடர்பான தமது தரப்பு வாதங்களை எழுத்து […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் திட்டம் தோல்வி – ஈரான் ஆட்சி சரியவில்லையென தகவல்

  • March 13, 2026
  • 0 Comments

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி (Ali Khamenei) கொலை செய்யப்பட்ட பின்னர், அந்நாட்டின் ஆட்சி மிக விரைவாக சிதைந்து விடும் என்ற எதிர்பார்ப்பு அமெரிக்க தரப்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை ஈரானிய ஆட்சி சரிந்து வருகிறது என்பதற்கான தெளிவான ஆதாரம் எதுவும் இல்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் (Donald Trump) வலுவான தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர். அதனால், கமேனி உயிரிழந்த பின்னர் வெனிசுலாவில் ( Venezuela) போன்று […]

இலங்கை செய்தி

மேல் நீதிமன்ற நீதிபதியாக தமிழர் நியமனம்!

  • March 13, 2026
  • 0 Comments

மேல் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.