இலங்கை செய்தி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணிநேர விசாரணை!

  • March 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்காக யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த மாணவர்களிடமே இந்த நீண்டநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஏற்கனவே கடந்த 10 ஆம் திகதி பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் பொலிஸார் […]

இலங்கை

முள்ளிப்பொத்தானையில் ஒரே இரவில் மூன்று வீடுகளில் கொள்ளை: நால்வர் கைது

  • March 19, 2026
  • 0 Comments

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரவில் மூன்று வீடுகளை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (19) அதிகாலை சுமார் 2.30 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் ஜன்னல் கம்பிகளை அகற்றி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையிடப்பட்ட சொத்துக்கள்: முதல் […]

இலங்கை செய்தி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு: பின்னணி என்ன?

  • March 19, 2026
  • 0 Comments

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விசாரணைக்கு அழைப்பது, வடக்கில் மீண்டும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியா என இலங்கை தமிழரசுக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றுகையிலேயே தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் Gnanamuthu Srinesan இவ்வாறு வினா தொடுத்தார். “யாழ்.பல்கலைக்கழக மாணவ அமைப்பின் தலைவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது வடக்கு மாகாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும். மாணவர்களின் செயற்பாடுகளில் ஏதேனும் குறைப்பாடுகள் […]

இலங்கை செய்தி

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கல் -மஹிந்தவுக்கு இலஞ்சம் வழங்கியதாக நீதிமன்றில் தெரிவிப்பு

  • March 19, 2026
  • 0 Comments

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு  கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (19) அறிவித்துள்ளது. மேலதிகமாக, குறித்த பணம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரான ஷமிந்திர ராஜபக்சவின் கணக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 2015 ஆம் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் சைப்ரஸ்த் தளங்கள் மீதான விமர்சனங்கள் – எதிர்கால நிலை குறித்து பேச்சுவார்த்தை

  • March 19, 2026
  • 0 Comments

சைப்ரஸில் உள்ள பிரித்தானியாவின்  அக்ரோடிரி (Akrotiri) மற்றும் டெகேலியா (Dhekelia) இரண்டுக்கும் இராணுவத் தளங்களுக்கு தொடர்பான நிலை மற்றும் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என சைப்ரஸ் (Cyprus) ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் (Nikos Christodoulides) தெரிவித்துள்ளார். அவர் இதை ஒரு காலனித்துவ விளைவு என்றும் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலைமை சீரானதும், பிரித்தானிய அரசாங்கத்துடன் வெளிப்படையான மற்றும் நேர்மையான கலந்துரையாடலை நடத்தப் போகிறோம் என பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் […]

உலகம் செய்தி

ஈரானின் ஏவுகணை, ட்ரோன்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடைமறிக்கப்பட்டது

  • March 19, 2026
  • 0 Comments

ஈரான் (Iran) ஏவிய ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15 ஆளில்லா விமானங்களை (drones) ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) தனது வான் பாதுகாப்புப் படைகள் மூலம் இன்று இடைமறித்துள்ளது. மோதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 334 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,714 ஆளில்லா விமானங்கள் எதிர்கொண்டுள்ளதாகத் ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களின் போது, இரண்டு இராணுவ வீரர்கள் மற்றும் ஆறு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் […]

உலகம் செய்தி

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீது தாக்குதல் – ஓமான் கடும் கண்டனம்

  • March 19, 2026
  • 0 Comments

கட்டார் (Qatar), ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) மற்றும் சவூதி அரேபியா (Saudi Arabia) ஆகிய நாடுகளில் உள்ள எரிசக்தி தளங்கள் மீது ஈரான் (Iran) நடத்திய தாக்குதல்களை ஓமான் சுல்தானகம் (Oman) கண்டித்துள்ளது. அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, சர்வதேச சட்டங்களையும் நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பது அவசியம் என்றும் ஓமான் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வசதிகள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் ஓமான் வலியுறுத்தியுள்ளது. இந்த […]

செய்தி

பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விலை உச்சம்

  • March 19, 2026
  • 0 Comments

கட்டாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) எரிசக்தி வளாகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விலை திடீரென உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலில் கட்டார் (Qatar) நாட்டில் உள்ள வசதிகளுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து,  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் (Iran) மீது மேலும் தாக்குதல்கள் நடத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, ஈரானின் சவுத் பார்ஸ் (South Pars) எரிவாயு வயலில் இஸ்ரேல் […]

இலங்கை செய்தி

அதிரடியாக குறைவடைந்த தங்க விலை

  • March 19, 2026
  • 0 Comments

தங்கத்தின் விலை இன்றைய தினம் அதிரடியாக குறைவடைந்துள்ளது. இதன்படி, இன்று (19) நண்பகல் கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 13,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. இதன்படி 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றைய தினம்  362,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை 9,000 ரூபாவினால் குறைந்திருந்ததுடன்,  நண்பகல் வேளையில் மேலும் 4,000 ரூபாவினால் தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று […]

உலகம் செய்தி

போர் வியூகத்தை மாற்றுகிறார் ட்ரம்ப்: மத்திய கிழக்கில் நடக்கப்போவது என்ன?

  • March 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது. இதற்கமைய ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு மற்றும் ஈரானின் கர்க் தீவு எண்ணெய் மையத்தை கைப்பற்றல் போன்ற நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான கூடுதல் படையினரை களமிறக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் ஆலோசித்துவருகின்றார் எனக் கூறப்படுகின்றது. ஈரான் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை கைப்பற்றுவதற்குரிய திட்டமும் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தரை […]