ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் சைப்ரஸ்த் தளங்கள் மீதான விமர்சனங்கள் – எதிர்கால நிலை குறித்து பேச்சுவார்த்தை

சைப்ரஸில் உள்ள பிரித்தானியாவின்  அக்ரோடிரி (Akrotiri) மற்றும் டெகேலியா (Dhekelia) இரண்டுக்கும் இராணுவத் தளங்களுக்கு தொடர்பான நிலை மற்றும் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என சைப்ரஸ் (Cyprus) ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் (Nikos Christodoulides) தெரிவித்துள்ளார்.

அவர் இதை ஒரு காலனித்துவ விளைவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலைமை சீரானதும், பிரித்தானிய அரசாங்கத்துடன் வெளிப்படையான மற்றும் நேர்மையான கலந்துரையாடலை நடத்தப் போகிறோம் என பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் அவர் கூறியுள்ளார்.

சைப்ரஸின் சுதந்திரத்தை நிறுவிய 1960 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், அக்ரோடிரி மற்றும் டெகேலியா தளங்களின் இறையாண்மை பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்டது.

இருப்பினும், ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல்  மோதலின் போது, இந்த மாதம் ரோயல் விமானப்படை   அக்ரோடிரி தளம் ட்ரோன்கள் (drones) மூலம் இலக்கு வைக்கப்பட்டது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி