உலகம் செய்தி

மத்திய கிழக்கு போரில் தவறான தகவல்களை வெளியிட்ட 100க்கும் மேற்பட்டோர் அபுதாபியில் கைது

  • March 20, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போரின் போது தவறான தகவல்களை படம்பிடித்து வெளியிட்டதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி காவல்துறை 109 பேரைக் கைது செய்துள்ளது. அபுதாபி காவல்துறை வெள்ளிக்கிழமை X தளத்தில் வெளியிட்ட பதிவில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களின் கருத்தைத் தூண்டவும், சமூகத்தினரிடையே வதந்திகளைப் பரப்பவும் வாய்ப்பு உள்ளது எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய போரின் போது தவறான தகவல்கள் அதிகரித்ததால், வளைகுடா முழுவதும் இதேபோன்ற நடவடிக்கைகள் […]

உலகம் செய்தி

உக்ரைன் மத்திய கிழக்கில் பாதுகாப்பு நடவடிக்கை -முக்கிய உட்கட்டமைப்புகளை காக்க இடைமறிப்புப் பிரிவுகள் நியமனம்

  • March 20, 2026
  • 0 Comments

ஐந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முக்கிய மற்றும் குடிமை உள்கட்டமைப்புகளை பாதுகாக்க, உக்ரைன் இடைமறிப்புப் பிரிவுகளை நிலைநிறுத்தியுள்ளது. பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவ் (Rustem Umerov) இதனை தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பகுதிகளை விரிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

செய்தி

இந்திய தூதுவருக்கு சீன மொழியில் புதிய பெயர்!

  • March 20, 2026
  • 0 Comments

இந்திய – சீன உறவு ஈரான் போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே, அதாவது 2026 ஆம் ஆண்டு ஆரம்பித்திலேயே நெருங்க ஆரம்பித்துள்ளது. குஜராத் மாநிலத்தை மையமாகக் கொண்ட மணிகொன்றோல் (moneycontrol) என்ற ஆங்கில செய்தித் தளம், இந்திய – சீன உறவின் நெருக்கம் குறித்து சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளது. இரு பெரிய எண்ணெய் கொள்வனவு நாடுகளான இந்தியாவும் சீனாவும், ஈரான் போரில் அமைதியை உருவாக்க சிறந்த தளம் என்று இச் செய்தித் தளம் சுட்டிக்காட்டியுள்ளது. எண்ணெய் வயல்களை ட்ரோன்கள் […]

உலகம் செய்தி

ஈரான் போர் தாக்கம் – அமெரிக்காவுக்கான ஆயுத ஏற்றுமதியை சுவிட்சர்லாந்து நிறுத்தியது

  • March 20, 2026
  • 0 Comments

  ஈரானுக்கு எதிரான அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் தொடரும் நிலையில், சுவிட்சர்லாந்து தனது நடுநிலை கொள்கையை முன்னிறுத்தி அமெரிக்காவுக்கான ஆயுத ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானுடன் தொடர்புடைய சர்வதேச ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு, மோதல் முடியும் வரை போர் தளபாடங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவுக்கு போர் தளபாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு அங்கீகாரம் வழங்க முடியாது என்றும் […]

இலங்கை செய்தி

அரச சேவை: அமைச்சரவைக்குழு கூடி ஆராய்வு!

  • March 20, 2026
  • 0 Comments

அரச சேவையை முறையாக பேணுவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் முதலாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கின் போர்ச் சூழ்நிலை காரணமாக தற்போது எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், வலுசக்தியை முகாமைத்துவம் செய்து அரச சேவையை தொடர்ச்சியாக பேணுவது தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அத்துடன், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பாகவும் குழு கவனம் செலுத்தியதுடன், பொதுமக்களுக்கு அரச […]

இலங்கை செய்தி

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு -மட்டக்களப்பில் சம்பவம்

  • March 20, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு ஊசலாடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அதே கிணற்றிலிருந்து மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லிக்காடு பால்பண்ணை பகுதிக்கு இன்று காலை சென்ற பொதுமக்கள், அங்கிருந்த பொதுக்கிணறு ஒன்றிலிருந்து அலறல் சத்தம் கேட்பதை உணர்ந்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளத்தில் நுழைய முயன்ற இருவர் கைது

  • March 20, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் நுழைய முயன்ற இருவரை ஸ்காட்லாந்து காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் எந்த நாட்வர்கள் என்பதை பொலிஸார் தெரிவிக்கவில்லை. சம்பவத்தில் 34 மற்றும் 31 வயதுடைய ஆணொருவரும் பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைகள் இன்னும் தொடர்கிறது என கூறப்படுகிறது. இந்தத் தளம் ஸ்கொட்லாந்தின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது பிரித்தானியாவின் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல் படை பிரிவும் இங்கு செயல்படுகிறது.

செய்தி

திருமணம் முடிந்த கையோடு விருது! நெகிழ்ந்துபோன ராஷ்மிகா

  • March 20, 2026
  • 0 Comments

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலங்கானா மாநில விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது X பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில், “நான் சிறு வயதாக இருந்தபோது யாராவது ஒரு மாநில அளவிலான விருதை வென்றால் அவர்களை சூப்பர் ஸ்டார்களாக பார்த்தேன். அவர்கள் எப்படி இதை சாதித்தார்கள், தினமும் என்ன செய்வார்கள் என நினைத்து ஆச்சரியப்படுவேன். நேற்று மாலை நான் மாநில அளவிலான விருது பெற்றது சிறப்பான தருணமாக இருந்தது. அந்த உணர்வுகளை வார்த்தைகளில் சொல்ல […]

உலகம் செய்தி

ஈரானிய எண்ணெய் தடைகள் நீக்கம்: 3–4 நாட்களில் ஆசியாவிற்கு விநியோகம் தொடங்கும் என அமெரிக்கா அறிவிப்பு

  • March 20, 2026
  • 0 Comments

ஈரானிய எண்ணெய் மீதான தடைகள் நீக்கப்பட்டால், சில நாட்களுக்குள் ஆசிய நாடுகளுக்கு விநியோகம் தொடங்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் (Chris Wright), கடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஈரானிய எண்ணெய் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் துறைமுகங்களுக்கு வந்து சேரலாம் என்று கூறினார். இதனிடையே ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலக சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இந்த நிலையை கட்டுப்படுத்த, கடலில் உள்ள டேங்கர்களில் இருக்கும் ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை […]

உலகம்

தென்கொரிய தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

  • March 20, 2026
  • 0 Comments

தென்கொரியாவின் Daejeon நகரில் அமைந்துள்ள வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 85 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் சியோலில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரெனத் தீ பரவியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், இத்தீ விபத்தில் சிக்கி காயமடைந்த 50 பேர் உடனடியாக மீட்கப்பட்டு […]