உலகம் செய்தி

ஈரானிய எண்ணெய் தடைகள் நீக்கம்: 3–4 நாட்களில் ஆசியாவிற்கு விநியோகம் தொடங்கும் என அமெரிக்கா அறிவிப்பு

ஈரானிய எண்ணெய் மீதான தடைகள் நீக்கப்பட்டால், சில நாட்களுக்குள் ஆசிய நாடுகளுக்கு விநியோகம் தொடங்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் (Chris Wright), கடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஈரானிய எண்ணெய் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் துறைமுகங்களுக்கு வந்து சேரலாம் என்று கூறினார்.

இதனிடையே ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலக சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இந்த நிலையை கட்டுப்படுத்த, கடலில் உள்ள டேங்கர்களில் இருக்கும் ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா விரைவில் தளர்த்தும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்டும் (Scott Bessent) , இந்த நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால், உலக எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி