உலகம் செய்தி

சர்வதேச அணுசக்தி முகமை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

  • March 27, 2026
  • 0 Comments

ஈரானின் புஷெர் Bushehr அணுமின் நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலையடுத்து, சர்வதேச அணுசக்தி முகமை The International Atomic Energy Agency (IAEA) தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் அதிகளவிலான கதிரியக்கப் பொருட்கள் இருப்பதால், ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அது ஈரானுக்குள்ளும் அண்டை நாடுகளிலும் பெரிய அளவிலான கதிரியக்க விபத்தை உண்டாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு பேரழிவைத் தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் மிக உயர்ந்த நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய […]

இலங்கை உலகம் செய்தி

ஆசியான் மாநாடு ஒத்திவைக்கப்படுமா?

  • March 27, 2026
  • 0 Comments

“மத்திய கிழக்கு போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள ஆசியான் (ASEAN) உச்சிமாநாடு மிகவும் சுருக்கமான முறையில் நடத்தப்படும்.” இவ்வாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் Ferdinand Marcos Jr அறிவித்துள்ளார். இந்த உயர்மட்டக் கூட்டத்தில் எரிபொருள் விநியோகம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய விவகாரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் தேவையற்ற […]

உலகம் செய்தி

10 ஆயிரம் படைகளை மத்திய கிழக்கில் களமிறங்கும் ட்ரம்ப்: நடக்கப்போவது என்ன?

  • March 27, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் 10,000 கூடுதல் தரைப்படை வீரர்களை களமிறக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருகிறார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டுடன் சமாதானப் பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன எனக் கூறப்படும் சூழ்நிலையிலேயே இவ்வாறான ராணுவ நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள 5,000 வீரர்களுடன், தற்போது புதிதாகச் செல்லவிருக்கும் படையில் காலாட்படை மற்றும் கவச வாகனங்களும் இடம்பெற வாய்ப்புள்ளது. இவர்கள் எங்கு நிலைகொள்வார்கள் என்பது பற்றிய […]

ஆஸ்திரேலியா செய்தி

வளைகுடாவுக்கு கண்காணிப்பு விமானத்தை அனுப்பியது ஆஸ்திரேலியா!

  • March 27, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போருக்கு ராணுவ உதவி வழங்கவில்லை என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் Donald Trump குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய Australia அரசாங்கம் மறுத்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து தங்களுக்கு முறையான கோரிக்கைகள் எதுவும் இதுவரை வரவில்லை என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் Richard Marles தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆஸ்திரேலியா தனது E-7A வெட்ஜெடைல் கண்காணிப்பு விமானத்தை வளைகுடா பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் […]

செய்தி விளையாட்டு

ஈரான் அணிக்கு அமெரிக்கா அழைப்பு!

  • March 27, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஈரான் அணி பங்கேற்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரான் வீரர்கள் அமெரிக்கா வருவது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை அமெரிக்கா வரவேற்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஆண்ட்ரூ கியூலியானி தெரிவித்துள்ளார். போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் விடுத்த கோரிக்கையை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் FIFA நிராகரித்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டில் நகரங்களில் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறானதொரு […]

இலங்கை

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • March 27, 2026
  • 0 Comments

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்றும் வறட்சியான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் […]

இலங்கை செய்தி

ரவிராஜ் படுகொலை: வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவ

  • March 27, 2026
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், மூன்று கடற்படை புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட எதிரிகளின் விடுதலையை ரத்து செய்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து, நீதியரசர்களான பி. சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று (28) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது, அவரது […]

உலகம் செய்தி

ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் கெடு!

  • March 27, 2026
  • 0 Comments

ஈரானின் எரிசக்தி நிலையங்கள்மீதான தாக்குதல்களை 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்தார். ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, ஏப்ரல் 6, வரை இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், அமெரிக்கா ஏற்கனவே இந்தப் போரில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். எனினும், ஈரான் ஒரு உடன்படிக்கைக்கு வரவில்லை என்றால் மீண்டும் தாக்குதல்கள் தொடரும் என அவர் […]

உலகம் செய்தி

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை?

  • March 26, 2026
  • 0 Comments

ஜப்பானின் தீவான ஹொன்ஷூவின் கடற்பகுதியில் இன்று (26) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் தற்போது வரை விடுக்கப்படவில்லை.

உலகம் செய்தி

வடக்கு இஸ்ரேலில் தாக்குதல் தீவிரம் – ஒருவர் உயிரிழப்பு , 25 பேர் வைத்தியசாலையில்

  • March 26, 2026
  • 0 Comments

வடக்கு இஸ்ரேலின் நஹாரியா பகுதியில்  ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவசர சேவை மாகன் டேவிட் அடோம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 25 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 50 வயதுடைய ஒருவருக்கு கை, கால்களில்  காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 13 பேர் சிறியளவான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவசர சேவை கூறியுள்ளது. இதேவேளை, லெபனானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

error: Content is protected !!