ஆசியா

ஜப்பானுக்குள் நுழைந்த சுனாமி அலைகள்

  • July 30, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முதல் சுனாமி அலைகள் வடக்கு ஜப்பானில் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுனாமி அலை 30 சென்டிமீட்டர் உயரம் கொண்டதாக NHK ஒளிபரப்பாளர் தெரிவித்தார். ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளில் ஒசாகாவிலிருந்து நகரின் தெற்கே உள்ள வகயாமா வரை மூன்று மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எதிர்பார்க்கப்படுவதாக ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் முன்னதாக கூறியது. ஜப்பானின் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் இதுவரை […]

ஐரோப்பா

உக்ரைனுக்காக தயாராகும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ட்ரோன்கள் – நெருக்கடியில் புட்டின்

  • July 30, 2025
  • 0 Comments

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட ட்ரோன்கள் தயாராகி வருகின்றது. செக் குடியரசில் அமைந்துள்ள LPP நிறுவனம், இதனை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த ட்ரோன்கள், நிலப்பரப்பு வரைபடங்களுடன் ஒப்பிட்டு இலக்குகளை துல்லியமாகக் கணிக்கவும் தாக்கவும் கமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் செயல்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், இந்த ட்ரோன்கள் இலக்கை தானாக அடையாளம் காணும் திறனையும் வழங்குகிறது. LPP நிறுவனம் இதுவரை நூற்றுக்கணக்கான ட்ரோன்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. மேலும் பல ட்ரோன்கள் […]

விளையாட்டு

‘இந்தியா மேல தப்பு இல்லை’… ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

  • July 30, 2025
  • 0 Comments

இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் செய்த ‘கைகுலுக்கல்’ முயற்சி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா (89 ரன்கள்) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (80 ரன்கள்) தங்கள் சதங்களை நெருங்கியிருந்தபோது, ஸ்டோக்ஸ் ஆட்டத்தை ட்ரா (சமநிலை) செய்யலாம் என்று கூறி, ஆட்டத்தை முடிக்க முயன்றார். ஆனால், ஜடேஜா இதை ஏற்கவில்லை, “போய் பந்து வீசு,” என்று கூறி ஆடினார். இதனால் கோபமடைந்த ஸ்டோக்ஸ், […]

இலங்கை

உலகின் அழகான தீவுகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த இலங்கை

  • July 30, 2025
  • 0 Comments

2025ஆம் ஆண்டுக்கான உலகின் 50 சிறந்த தீவுகள் பட்டியலில், இலங்கை மிகவும் அழகான தீவாக முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது. உலகளாவிய பயணத் தளமான Big 7 Travel வெளியிட்ட தகவலுக்கமைய, இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியல், உலகம் முழுவதும் உள்ள இயற்கை எழில் கொண்ட தீவுகளைக் கொண்டாடுகிறது. பிரபலமான மூரியா (பிரெஞ்சு பாலினீசியா), கலபகோஸ் தீவுகள் (ஈக்வடார்), மற்றும் சீஷெல்ஸ் போன்ற தீவுகளை முந்தி, இலங்கை முதலிடம் பிடித்துள்ளது. Big 7 Travel வெளியிட்ட தகவலுக்கமைய, […]

இலங்கை

இலங்கை காலநிலை – வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கில் இடியுடன் கூடிய மழை

  • July 30, 2025
  • 0 Comments

இலங்கை எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 13 அடி உயர சுனாமி அலை தாக்கியதாக தகவல்

  • July 30, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்செட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலை தாக்கியதாக தகவல் வெளியானது. ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று காலை 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கியிலிருந்து சுமார் 85 மைல் தொலைவில், 19 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன, மேலும் 1 மீட்டர் வரை அலைகள் ஏற்படக்கூடும் என்று […]

ஐரோப்பா

இத்தாலி நாட்டுக்கு உட்பட்ட தீவு முழுவதும் புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் கொண்ட கல்லறைகள்

  • July 30, 2025
  • 0 Comments

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள லம்படுசா தீவு முழுவதும் கல்லறைகள் மாத்திரம் காட்சி கொடுப்பதாக தெரியவந்துள்ளது. அங்கு ஆப்பிரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு புலம்பெயரும் மக்கள், படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தால் உடல்களை அடக்கம் செய்யும் இடமாக மாறியுள்ளது. 6 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த தீவில் அடங்கிய குறிப்பிட்ட பகுதியில், அடையாளம் தெரியாத புலம்பெயர்ந்தோர் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. இவ்வாறு உடல்கள் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கல்லறைகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து காணப்படுகிறது.

செய்தி

ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்தில் 5000 அடி உயரத்தில் ஏற்பட்ட பரபரப்பு – காப்பாற்றப்பட்ட பயணிகள்

  • July 30, 2025
  • 0 Comments

வொஷிங்டனிலிருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட போயிங் டிரீம்லைனர் விமானத்தில் புறப்பட்ட சிலநிமிடங்களுக்குள்ளே எஞ்சின் கோளாறு ஏற்பட்டது. விமானம் 5,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்தபோது, அதன் இடதுபக்க எஞ்சின் திடீரென பழுதடைந்தது. இதையடுத்து விமானிகள் “MAYDAY” என அவசர உதவி அழைப்பு விடுத்தனர். விமானம் 5000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடதுபக்கத்தில் உள்ள எஞ்சின் பழுதானது. எஞ்சின் பழுதானதை அடுத்து எரிபொருள் தீர, விமானம் வானில் சிறிது நேரம் வட்டமடித்தது. எரிபொருள் தேவையான அளவுக்கு தீர்ந்த பிறகு விமானம் மீண்டும் […]

உலகம் செய்தி

ஏஐ வளர்ச்சி காரணமாக டிசிஎஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பெரிய அளவிலான பணிநீக்கம்

  • July 30, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் மீதான வேலைப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தனது உலகளாவிய ஊழியர்களில் சுமார் 2%–ஐ, அதாவது 12,261 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. அதேபோல், மைக்ரோசாஃப்ட், இன்டெல், மெட்டா, பானாசோனிக் உள்ளிட்ட பல நிறுவனங்களும் செயல்திறன் மற்றும் மறுசீரமைப்பு காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்கி வருகின்றன. ஐடி அமைச்சகம் இந்த நிலைமையை […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

அமெரிக்க வரி அச்சம் – ஆசிய பங்குகள் சரிவு: யூரோ மதிப்பு மேலும் வீழ்ச்சி

  • July 30, 2025
  • 0 Comments

ஆசிய பங்குச் சந்தைகள் நேற்று வீழ்ச்சியைக் கண்டுள்ளதுடன் யூரோ நாணயத்தின் மதிப்பும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியத்துக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிறை குறைகள் பற்றி முதலீட்டாளர்கள் இடையே ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வர்த்தக ஒப்பந்தம், உலகளாவிய வளர்ச்சியைத் தடுக்கும் அபாயம் உள்ளதாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும், “இந்த ஒப்பந்தத்தில் பங்குபற்றாத அனைத்து நாடுகளும், 15% முதல் 20% வரை ‘உலக தீர்வை’ […]