இலங்கை – சம்பூரில் மனித எச்சங்களை தோண்டுவதற்கான கட்டளையை பிறப்பித்த நீதிமன்றம்!
திருகோணமலை – சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியை கிழக்கு மாகாண பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் அனுமதியுடன் பாதுகாப்புப்படையின் பொறியியல் பிரிவின் உத்தியோகத்தர்களின் ஊடாக மனித வலு கொண்டு தோண்டுவதற்கான கட்டளையை நீதிமன்றம் இன்று (06) பிறப்பித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி குறித்த வழக்கை மீள அழைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான சட்டமாநாடு இன்று புதன்கிழமை (06) மதியம் மூதூர் நீதிமன்றில் […]












