ஐரோப்பா

ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதலை அதிகரிப்பவர்களை குறிவைப்போம் ; அறிக்கை வெளியிட்டுள்ள G7

  • October 2, 2025
  • 0 Comments

ஏழு நாடுகளின்(G7) நிதி அமைச்சர்கள் குழு புதன்கிழமை ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதலை தொடர்ந்து அதிகரித்து வருபவர்களையும், மோசடியை எளிதாக்குபவர்களையும் குறிவைத்து ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க கூட்டு நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரிவித்தது. மாஸ்கோவின் உக்ரைன் படையெடுப்பு காரணமாக ரஷ்ய வருவாயைக் குறைக்கும் முயற்சிகளில் வரிகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தடைகள் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை G7 நிதி அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர். நிதியமைச்சரின் மெய்நிகர் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியா மற்றும் […]

இலங்கை

காலி சிறைச்சாலையில் தீவிபத்து – வளாகத்தில் கூடிய கைதிகளின் உறவினர்கள்!

  • October 2, 2025
  • 0 Comments

காலி சிறைச்சாலையில் இன்று (02.10) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காலி மாநகர சபை தீயணைப்புத் துறையின் 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையே தீவிபத்தை தொடர்ந்து காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்களும் சிறைச்சாலை வளாகத்திற்கு அருகில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகம்

எத்தியோப்பியாவில் வருடாந்திர கொண்டாட்டத்தின் போது தேவாலய சாரக்கட்டு இடிந்து விழுந்ததில் 36 பேர் பலி

  • October 2, 2025
  • 0 Comments

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பிராந்தியத்தில் மர சாரக்கட்டு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். வடக்கு ஷேவா மண்டலத்தின் அரேர்ட்டி நகரில் உள்ள வருடாந்திர தேவாலய கொண்டாட்டத்தின் போது புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7:45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. தேவாலயத்தில் பணிகளை முடிக்கப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக மர சாரக்கட்டு இடிந்து விழுந்ததாக மாநிலத்துடன் இணைந்த ஃபானா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மாவட்ட காவல்துறைத் தலைவர் அகமது கெபேஹுவை மேற்கோள் […]

ஆசியா

இந்தோனேசியா பள்ளி கட்டட விபத்து – இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிரிழந்திருக்கலாம்!

  • October 2, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுவரை 59 பேர் மாயமாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை சிடோர்ஜோ நகரில் உள்ள இரண்டு மாடி பள்ளிக்கட்டடம் இடிந்து விழுந்தது. இதன்போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர்.  மீட்பு முயற்சிகள் தொடங்கியதிலிருந்து பதின்மூன்று பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில இரண்டுபேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் நிலையற்ற அமைப்பு காரணமாக மீட்புப் […]

இலங்கை செய்தி

திருகோணமலையில் 16 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரம் – நீதிமன்றத்தின் உத்தரவு!

  • October 2, 2025
  • 0 Comments

திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கற்பழித்த குற்றவாளிக்கு 10வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம் அப்துல்லாஹ் இன்று (02.10) குறித்த தீர்ப்பினை வழங்கியுள்ளார். 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தாக்கல் […]

ஐரோப்பா

பிரித்தானியா : மென்செஸ்டரில் ஜெப ஆலயத்திற்கு அருகில் ஏற்பட்ட பதற்ற நிலை – நால்வர் படுகாயம்!

  • October 2, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் மென்செஸ்டரில் உள்ள ஜெப ஆலயம் ஒன்றில் பொதுமக்களை நோக்கி பயணித்த காரினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் கத்தி குத்து சம்பவம் ஒன்றும் பதிவாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (02.10) காலை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் அவசர அழைப்பை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார், மற்றும் துணை மருத்துவர்கள் காயமடைந்த  நான்கு பேரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். அத்துடன் குற்றவாளி என அறியப்படும் நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக […]

இலங்கை

மட்டக்களப்பு சிறையில் இருக்கும்போது சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தாரா பிள்ளையான்?

  • October 2, 2025
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானிற்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈஸ்டர் தாக்குதல் குறித்து முறையான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் 67000 பக்க அறிக்கைகளை சி.ஐ.டி அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும்  பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சமீபத்தில் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்  இந்த விசாரணைகளில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தாக்குதல் தொடர்பான ஆரம்ப விசாரணைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் அலட்சியம் குறித்து முறையான விசாரணை நடைபெற்று வருவதாகவும்  […]

பொழுதுபோக்கு

வெளிவந்தது நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 ஃபஸ்ட் லுக்

  • October 2, 2025
  • 0 Comments

நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த இப்படம் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. முதல் பாக வெற்றியை தொடர்ந்து இப்போது 2ம் பாகத்தினை சுந்தர் சி இயக்குகிறார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். 2ம் பாகத்தில் நயன்தாரா, துனியா விஜய், ரெஜினா, யோகி பாபு, ஊர்வசி, அபுநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, […]

இந்தியா

தெற்காசிய நாடுகளில் இந்திய ரூபாயில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள தீர்மானம்!

  • October 2, 2025
  • 0 Comments

அமெரிக்க நாணய அலகான டொலரை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில் தெற்காசிய நாடுகளில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது இந்திய ரூபாயை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் உள்ளிட்ட தெற்காசிய பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாவை பயன்படுத்த  இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டானுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்தியா இந்திய ரூபாயை நேரடியாகப் பயன்படுத்த எதிர்பார்க்கிறது. இந்த நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி […]

வட அமெரிக்கா

ஐ.நா.வின் ‘ஸ்னாப்பேக்’ பொறிமுறைக்கு ஆதரவாக ஈரான் மீது புதிய தடைகளை விதித்துள்ள அமெரிக்கா

  • October 2, 2025
  • 0 Comments

ஐ.நா.வின் சமீபத்திய ஸ்னாப்பேக் தடைகளுக்கு ஆதரவாக, ஈரானின் அணு மற்றும் ஆயுதத் திட்டங்களுடன் தொடர்புடைய டஜன் கணக்கான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதன்கிழமை புதிய தடைகளை அறிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஒரு அறிக்கையில், ஈரானின் 2004 க்கு முந்தைய அணு ஆயுதத் திட்டத்தின் வாரிசு என்று அவர் விவரித்த தற்காப்பு கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐந்து பேர் மற்றும் ஒரு நிறுவனம் உட்பட 44 தனிநபர்கள் மற்றும் […]