உலகம் செய்தி முக்கிய செய்திகள்

“நான் அதற்கு தகுதியானவர் அல்ல” – அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா

  • October 10, 2025
  • 0 Comments

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தனது நாட்டில் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடியதற்காக 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். 58 வயதான மச்சாடோ, இந்த மதிப்புமிக்க விருதை வென்ற முதல் வெனிசுலா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஆறாவது நபர் ஆனார். இந்நிலையில், பரிசு அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, நோர்வே நோபல் நிறுவனத்தின் இயக்குனர் கிறிஸ்டியன் பெர்க் ஹார்ப்விகன் (Kristian Berg Harpviken) தொலைபேசி அழைப்பு மூலம் மச்சாடோவுக்கு […]

செய்தி விளையாட்டு

INDvsWI Test – முதல் நாள் முடிவில் 318 ஓட்டங்கள் குவித்த இந்தியா

  • October 10, 2025
  • 0 Comments

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று ஆரம்பமானது. நாணய சுழற்சியை வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் […]

உலகம்

ஆப்கானியர்களின் தைரியத்தைச் சோதிக்க வேண்டாம் – பாகிஸ்தானுக்கு தலிபான் அமைச்சர் எச்சரிக்கை

  • October 10, 2025
  • 0 Comments

40 ஆண்டுகளுக்குப் பின்பு ஆப்கானிஸ்தானில் அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்கக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு வெளியுறவு அமைச்சர் முட்டாகி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகாரப்பூர்வ விஜயமாக நேற்று டெல்லி வந்த ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி, இன்று தனது குழுவினருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் தாக்குதல் நடந்துள்ளது, பாகிஸ்தானின் இந்தச் செயலை நாங்கள் தவறாகக் கருதுகிறோம் என்று […]

பொழுதுபோக்கு

கமுருதீன் பிக் பாஸ் சென்றதால் மகாநதி சீரியலில் ஏற்பட்ட மாற்றம்

  • October 10, 2025
  • 0 Comments

பிக் பாஸ் என்றாலே அதில் சின்னத்திரை நடிகர்கள், வெள்ளித்திரை நடிகர்கள், இசையமைப்பாளர்கள், கன்டன் கிரியேட்டர்ஸ், பாடகர்கள், இயக்குனர்கள், என ஏராளமான துறைகளில் இருந்து கலந்துகொள்வது வழக்கம். இம்முறை விஜய் டிவியில் ஆரம்பமாகியுள்ள பிக்பாஸ் தமிழ் – சீசன் 9 இலும் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் திரும்பி வெளியில் வருவதற்கு எத்தனை நாட்கள் அல்லது மாதங்கள் செல்லும் என்பது யாருக்கும் தெரியாது. அது மக்களின் கைகளிலேயே உள்ளது. இந்த நிலையில் […]

விளையாட்டு

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்பில் கேள்விக்குறியாகும் மதீஷ பத்திரனவின் எதிர்காலம்!

  • October 10, 2025
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன அடுத்த ஐ.பி.எல் சீசனில் விளையாடுவதில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் காயங்களால் சில போட்டிகளை தவறவிட்ட பத்திரனா, 2025ஆம் ஆண்டு13 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார். டெத் ஓவர்களில் சிறந்த யோர்க்கர் வீச்சால் அவர் புகழ்பெற்றிருந்தாலும், தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு, 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு […]

இலங்கை

இலங்கையில் உச்சம் தொட்ட எலுமிச்சை பழத்தின் விலை – கிலோ 3500 ரூபாய்!

  • October 10, 2025
  • 0 Comments

இலங்கையில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் 3,000-3,500 ரூபாய் என்ற சில்லறை விலையில் விற்கப்படுவதாக நுகர்வோர் கூறுகின்றனர். இதன்படி ஒரு எலுமிச்சை பழத்தின் விலை 50-60 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. விலை உயர்வு காரணமாக சில நுகர்வோர் எலுமிச்சை பழத்தை கொள்வனவு செய்வதை  நிறுத்திவிட்டதாக காய்கறி விற்பனையாளர்கள் கூறுகின்றனர். எலுமிச்சை பழத்தின் இருப்பு பற்றாக்குறையே  விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியா

அரச, தனியார் துறை பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கும் கர்நாடக மாநிலம்!

  • October 10, 2025
  • 0 Comments

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை வழங்கும் நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அங்கு பணிப்புரியும் அனைத்து பெண்களுக்கும் ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுமுறை மாதவிடாய் காலங்களில் வழங்கப்படும். இந்தக் கொள்கை பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை சலுகைகளை விரிவுபடுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக கர்நாடக மாநிலம் மாறியுள்ளது. ஒடிசா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அரசு […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – முதல் தலைவர் இவர் தான்…

  • October 10, 2025
  • 0 Comments

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு 5 நாட்கள் கடந்த நிலையில் இன்னும் தலைவர் பதவி குறித்த அப்டேட்டுகள் வரவில்லை என எதிர்பார்த்து காத்திருந்தோருக்கு ஒரு செய்தி வந்துள்ளது. பிக் பாஸ் தமிழ் 9 சீசனின் முதல் தலைவராக, சோஷியல் மீடியா பிரபலம் மற்றும் போட்டியாளர்களில் ஒருவரான துஷார் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். வழக்கமாக, பிக் பாஸ் வீட்டுல தலைவர்னா, சும்மா ஒரு ‘பேருக்கு’ இருப்பார். சண்டையைப் பஞ்சாயத்து பண்ணணும், வேலையைப் பிரிச்சு விடணும், அவ்வளவுதான். ஆனா, இந்த […]

உலகம்

காசா பகுதியில் போர் நிறுத்தம் அமலில் – இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு

  • October 10, 2025
  • 0 Comments

காசா பகுதியில் போர் நிறுத்தம் அமலில் இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அமைதித் திட்டத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு, காசா பகுதியில் உள்ள பல பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய அதிகாரிகள் தங்கள் படைகளை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளனர். அதன்படி, காசா பகுதியின் வடமேற்குப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவக் குழுக்களை திரும்பப் பெற இஸ்ரேலிய அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா பகுதியில் இராணுவக் குழுக்களை திரும்பப் பெறும் செயல் அந்த பகுதியில் இஸ்ரேலியக் கட்டுப்பாட்டின் […]

ஐரோப்பா

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய கொடூர தாக்குதல் – 20 பேர் காயம் – நகரம் முழுவதும் மின்சாரத் தடை

  • October 10, 2025
  • 0 Comments

இன்று(10) அதிகாலை உக்ரைன் தலைநகரில் ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் 20 பேர் காயமடைந்ததாகவும், நகரத்தில் மின்சாரம் தடைப்பட்டதாகவும் கியேவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்தார். கியேவின் கிழக்குப் பகுதியில் உள்ள டினிப்ரோ ஆற்றின் இடது கரையில் மின் தடை மற்றும் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் கிளிட்ச்கோ டெலிகிராமில் தெரிவித்தார். முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள், இரண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வாகனங்களையும் சேதப்படுத்தியதாக அவர் மேலும் கூறினார். கியேவின் கிழக்குப் புறநகரில் […]