ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் எல்லையில் ஏற்படும் தாமதத்தால் மில்லியன் கணக்கில் ஏற்படும் இழப்பு!

  • October 12, 2025
  • 0 Comments

ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இங்கிலாந்து பயணிகள் எல்லைகளில் நீண்ட வரிசையை சந்திப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தாமதங்கள் பொருளாதாரத்திற்கு £400 மில்லியன் இழப்பை ஏற்படுத்தும் என்று தொழில்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன. கூடுதல் சோதனைகளை முடிக்க பயணிகள் “ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் மட்டுமே எடுக்க வேண்டும் ” என்று உள்துறை அலுவலகம் கூறியிருக்கிறது. இருப்பினும் “பரபரப்பான நேரங்களில் நீண்ட காத்திருப்பு” ஏற்பட வழிவகுக்கும் என்று அவ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. […]

பொழுதுபோக்கு

மீண்டும் நெல்சனுடன் இணையும் ரஜினி! அப்போ லோகேஷின் நிலை என்ன?

  • October 12, 2025
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த ஜெய்லர் படம்தான் ரஜினி நடித்ததில் அதிக வசூல் அள்ளிய படம் என்ற இடத்தில் உள்ளது. இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ்குமார், மோகன்லால் என பலரும் நடித்திருந்தனர். மேலும், உலகளவில் ரூ. 620 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் […]

உலகம்

கலிபோர்னியாவில் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர்! ஐவர் படுகாயம்!

  • October 12, 2025
  • 0 Comments

தெற்கு கலிபோர்னியாவில் ஹெலிகொப்டர் ஒன்று கட்டிடத்தின் மீது மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில்  ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த நேரத்தில் காயமடைந்த மூன்று பேர் சாலையில்  நடந்துச் சென்றதாக கூறப்படுகிறது. கலிபோர்னியா கடற்கரைக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அப்பகுதியில் பெருந்திரளான மக்கள் குவிந்திருந்தனர். குறித்த ஹெலிகொப்டரில்  பயணித்த சிலர் அந்நிகழ்விற்கு வருகை தந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், விபத்து குறித்த விசாரணைகள் […]

செய்தி

அண்டார்டிகா கடற்பகுதியில் இருந்து வெளியேறும் ஆபத்தான நச்சு வாயு!

  • October 12, 2025
  • 0 Comments

அண்டார்டிகா கடலோரப் பகுதியின் விரிசல்களில் இருந்து மிகவும் சக்திவாய்ந்த பசுமை இல்ல வாயு வெளியேறுவது கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் ( Nature Communications)வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி,  இப்பகுதி முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் வெப்பமடைவதால், கடற்பரப்பில் உள்ள பிளவுகளில் இருந்து மீத்தேன் வாயு அதிக விகிதத்தில் வெளியேறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கடல் தளங்களுக்கு அடியில் ஒரு பெரிய மீத்தேன் நீர்த்தேக்கம் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அண்டார்டிகாவின் ராஸ் கடலின் கடற்பரப்பில் கண்ணிற்கு புலப்படாத வகையில் இந்த […]

ஐரோப்பா

உக்ரைன் போர் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியிடம் ஜெலென்ஸ்கி விடுத்த கோரிக்கை

  • October 12, 2025
  • 0 Comments

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமைதிக்கான மத்தியஸ்தராக செயல்பட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் செய்தது போல், உக்ரைனிலும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசி உரையாடலில் ஜெலென்ஸ்கி இந்தக் கோரிக்கையை விடுத்ததாகக் கூறுகிறார். அமெரிக்க ஜனாதிபதி ஒரு பிராந்தியத்தில் போரை நிறுத்த முடிந்தால், அவர் நிச்சயமாக மற்ற போர்களை நிறுத்த முடியும் என்று உக்ரைன் ஜனாதிபதி கூறினார். இதனிடையே, ரஷ்யா […]

வாழ்வியல்

30 வினாடிகள் நடந்தால் போதும் – புதிய ஆய்வில் வெளியான மகிழ்ச்சி தகவல்

  • October 12, 2025
  • 0 Comments

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்களுக்கு ஆய்வில் மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது வெளியான ஆய்வு ஒன்றிற்கமைய, வெறும் 30 வினாடிகள் நடைப்பயிற்சியும் ஆரோக்கியத்திற்குப் பெரும் நன்மைகளை அளிக்கக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. Micro Walking எனப்படும் இந்த நடைமுறை, ஒரு நேரத்தில் 10–30 வினாடிகள் நடப்பதைக் குறிக்கிறது. அலுவலகத்தைச் சுற்றி ஒரு சுற்று செல்லுதல், படிக்கட்டுகளில் ஏறுதல் போன்ற எளிய நடைப்பயிற்சிகள் கூட வளர்சிதை மாற்றத்தை தூண்டி அதிக கலோரிகளை எரிக்க உதவுகின்றன. ரோயல் சொசைட்டி B […]

உலகம்

மெக்சிகோவை உலுக்கிய புயல் – 37 பேர் உயிரிழப்பு! மீட்புப் பணிகள் தீவிரம்

  • October 12, 2025
  • 0 Comments

மெக்சிகோவில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து தாக்கிய இரண்டு புயல்களின் தாக்கத்தால் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள், பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயல்களின் காரணமாக, கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள் சேதமடைந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்துள்ளது. குறிப்பாக, புயலால் கடல் கரைகள் உடைந்து உள்ளூர் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. மீட்பு மற்றும் மீள்குடியமர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மெக்சிகோ இராணுவம் மற்றும் அவசரநிலை சேவைகள் வெள்ளத்தில் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 3 கிலோகிராம் கம்மி இனிப்பை உட்கொண்டமையால் நபருக்கு ஏற்பட்ட உயிராபத்து

  • October 12, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் 3 நாட்களில் 3 கிலோகிராம் கம்மி (gummy) இனிப்புகளை உட்கொண்ட நபர் மரணத்தின் விளிம்புக்குச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 33 வயதான நேத்தன் ரிமிங்டன் (Nathan Rimington) என்பவர் மொத்தம் 10,500 கலோரிகள் உடைய இனிப்புகளை உட்கொண்டுள்ளார். இதன் காரணமாக நேத்தன் அதிக சிரமத்துக்குள்ளாகியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவர் கடும் வயிற்று வலி, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது. பின்னர் மிதமிஞ்சி ஜெலட்டினை (gelatin) […]

இலங்கை செய்தி

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

  • October 12, 2025
  • 0 Comments

இலங்கையில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால் சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மாற்றமடைந்து வருகின்றன. பேலியகொட மற்றும் கொழும்பு – புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பிற சமையல் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உருளைக்கிழங்கு விலைகளில் சிறிய உயர்வுகள் பதிவாகியுள்ளன. பாகிஸ்தான் உருளைக்கிழங்கு தற்போது ஒரு கிலோகிராம் 165 ரூபாயிலிருந்து 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் உருளைக்கிழங்கு 210 ரூபாயிலிருந்து 220 ரூபாய் வரை விற்பனையாகின்றது. வெங்காய விலைகளிலும் மாறுபாடுகள் […]

உலகம்

காசாவில் நடைமுறைக்கு வந்த போர் நிறுத்தம் – தரையிறக்கப்படும் அமெரிக்க துருப்புக்கள்

  • October 12, 2025
  • 0 Comments

காசாவில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அங்கு போர் தணிந்து அமைதி நிலவுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான நடவடிக்கை காரணமாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளன. இந்நிலையில் நேற்று முதல் காசாவில் போர் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். போர் நிறுத்த நடவடிக்கையில் மத்தியஸ்த நாடுகளாக கட்டார், எகிப்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் செயற்பட்டன. அமெரிக்கா முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை ஏற்று இஸ்ரேல் மற்றும் […]