ஐரோப்பாவை அச்சுறுத்தும் போர் அபாயம் – ஜெர்மனி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை
ஜெர்மனியில் போர் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க வேண்டிய அபாயநிலைமை ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 35 வருடங்களின் பின்னர் ஜெர்மனியின் சிவில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் உதவிக்கான மத்திய அலுவலகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பு போன்று இல்லாதபோதும் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆய்வை மேற்கொண்ட அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு குறித்து ரஷ்யா விடுத்துள்ள அச்சுறுத்தல்களின் பின்னணியில், இந்த எச்சரிக்கை வெளியாகி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போருக்கு தயாராக இருக்க வேண்டும். […]













