ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்!

  • November 8, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் நேற்று கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் ஒருவர் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பர்மிங்காமில் (Birmingham) உள்ள ஸ்மால்புரூக் குயின்ஸ்வே (Smallbrook Queensway) பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பெண் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் (West Midlands) காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவசர சேவைகள் குழு மற்றும் காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். […]

பொழுதுபோக்கு

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் இதோ….

  • November 8, 2025
  • 0 Comments

தளபதி விஜய் நடிக்கும் இறுதி படமான ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தற்போது ரிலீஸாகி உள்ளது. விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் அனிருத் இசையில் ஜனநாயகன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.  

உலகம் செய்தி

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தையில் பின்னடைவு!

  • November 8, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இடம்பெற்று வரும் எல்லை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைதி பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தை இஸ்தான்புல் நகரில் இடம்பெற்றது. பேச்சுவார்த்தைகள் எவ்வித இணக்கமும் இன்றி நிறைவு பெற்றமைக்கு இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துகின்றன. இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் (Zabiullah Mujahid) பேச்சுவார்த்தை தோல்விக்கு பாகிஸ்தானைக் குற்றம் சாட்டினார். “பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானின் கோரிக்கைகள் […]

ஐரோப்பா

துருக்கியில் வாசனை திரவியக் கிடங்கில் பாரிய தீவிபத்து – 06 பேர் பலி!

  • November 8, 2025
  • 0 Comments

துருக்கியின் வடமேற்கில் உள்ள ஒரு வாசனை திரவியக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திலோவாசியில் (Dilovasi) இன்று இந்த விபத்து நிகழ்ந்ததாக கோகேலி (Kocaeli) மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த தீவிபத்தில் 05 பேர் படுகாயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், நீதித்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.

பொழுதுபோக்கு

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு கௌரவம்

  • November 8, 2025
  • 0 Comments

56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் 20 முதல் 28 ஆம் திகதி வரை கோவாவில் நடைபெற்றவுள்ளது. இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், நடிகர் ரஜினிக்கு இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.

ஐரோப்பா செய்தி

UKவில் புகலிட அந்தஸ்த்து பெற்றிருந்தாலும், இனி நிரந்தரமாக தங்க முடியாது?

  • November 8, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் இந்த மாத இறுதியில் குடியேற்றம் மற்றும் புகலிட முறைமையில் மிகப் பெரிய மாற்றத்தை உள்துறை செயலாளர் அறிவிக்கவுள்ளதாக  பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) டென்மார்க்கின் குடியேற்ற கொள்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் அதனை ஒத்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. அதாவது  புகலிட அந்தஸ்த்து பெற்றவர்களை  நாட்டில் தற்காலிகமாக தங்கவைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் குடும்ப மறு ஒருங்கிணைப்பை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் […]

இந்தியா செய்தி

ஏர் இந்தியா விமான விபத்து – விமானிதான் காரணமா?

  • November 8, 2025
  • 0 Comments

ஏர் இந்தியா விமான விபத்திற்கு அவ்விமானத்தை இயக்கிய விமானி காரணமல்ல என இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜுன் மாதம் இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச்  சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மருத்துவ  மாணவர் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவரை தவிற விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விமான விபத்திற்கு விமானி காரணமாக இருக்கலாம் என்ற வகையில் பிரபல ஆங்கில பத்திரிக்கையொன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. […]

இலங்கை

ஊழல் எதிர்ப்பு இயக்கம் அரசியல் நலன்களுக்காக இயக்கப்படக்கூடாது!

  • November 8, 2025
  • 0 Comments

அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை ஆதரிப்பதாகவும், ஆனால் அது அரசியல் நலன்களுக்காக இயக்கப்படக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சர்க்கரை இறக்குமதி ஊழல், 323 கொள்கலன்களின் சர்ச்சைக்குரிய வெளியீடு மற்றும் மின் விசா மோசடி ஆகியவை தொடர்பிலும் கேள்வி எழுப்பியுள்ளார். மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை அடையப்பட்டதை அவர் அங்கீகரித்ததாகவும், ஆனால் […]

இலங்கை செய்தி

போர் இல்லாத சூழ்நிலையில் பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஏன்?

  • November 8, 2025
  • 0 Comments

போர் இல்லாத சூழ்நிலையிலும் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மை முகமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். ” வருடாந்த வரவு- செலவுத் திட்ட சடங்கு நடந்து முடிந்துள்ளது. எனினும், வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் உணவு திட்டத்திற்கு நிதியளிப்பதை நிறுத்திய ட்ரம்ப் – உச்சநீதிமன்றத்தின் உத்தரவு!

  • November 8, 2025
  • 0 Comments

உணவு முத்திரைகள் என்றும் அழைக்கப்படும் துணை ஊட்டச்சத்து உதவித் ( Snap) திட்டத்திற்கு நிதியளிப்பதை இடைநிறுத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மில்லியன் கணக்கான குறைந்த வருமானம் கொண்ட அமெரிக்கர்கள் நலன் பெறும் குறித்த திட்டத்திற்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கீழ் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை  தீர்ப்பளித்திருந்தது. குறித்த தீர்ப்பை எதிர்த்து வெள்ளை மாளிகை அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தது. இந்நிலையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தற்போது நடத்தி […]