துருக்கியில் உயிரிழந்த ஜேர்மன் குடும்பம் – விசாரணையில் வெளியான திருப்பம், 16 பேர் கைது!
துருக்கியில் உயிரிழந்த ஜெர்மனிய குடும்பத்தின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மனியில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக தம்பதியர் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் துருக்கிக்கு விஜயம் செய்திருந்தனர். அப்போது ஓர்டகோய் (Ortakoy) தெருக்கடையில் இருந்து சில உணவுகளை சாப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கடுமையாக நோய்வாய்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை இரு குழந்தைகள் உயிரிழந்தனர். மறுநாள் தாயார் உயிரிழந்தார். பல நாட்களாக தீவிர சிகிச்சையில் […]












