இந்தியா: ஏப். 18 வரை வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்!
தமிழகத்தில் ஏப். 18 வரை வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை(ஏப்.14) வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.15) முதல் வெள்ளிக்கிழமை(ஏப். 18) வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை(ஏப். 14) காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 38.6 டிகிரி செல்சியஸ் திருத்தணியில் பதிவாகியுள்ளது. அதற்கடுத்தபடியாக, மதுரை […]













