செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் காட்டுத்தீ தொடர்ந்து வேகமாக பரவும் அபாயம்

  • January 14, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் பரவி வரும் காட்டுத்தீ மேலும் பரவும் அபாயம் உள்ளது. தீயை பெருமளவில் தூண்டிய சாண்டா அனா காற்று வரும் நாட்களில் மீண்டும் வலுப்பெறக்கூடும் என்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது. அதன்படி, மணிக்கு 112 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால், தீ மீண்டும் தீவிரமடையக்கூடும் என்று அமெரிக்க வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள், தீ தற்போது 14,117 ஏக்கர் பரப்பளவில் எரிந்து வருவதாகக் […]

உலகம்

வானில் நிகழவுள்ள அரிய நிகழ்வு தொடர்பில் வெளியான தகவல்

  • January 14, 2025
  • 0 Comments

வெள்ளி, செவ்வாய்,வியாழன்,சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய வானியல் நிகழ்வு ஏற்படவுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி அவதானிக்கமுடியும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அரிய வானியல் நிகழ்வை ,தொடர்ந்து 4 வாரங்களுக்கு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் அவதானிக்கமுடியும். அத்துடன் யுரேனஸ்,நெப்டியூன் தவிர்த்து ஏனைய கோள்களை தொலை நோக்கியின்றி வெறும் கண்களில் பார்வையிட முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வியல்

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? மருத்துவர்கள் கூறும் தகவல்

  • January 14, 2025
  • 0 Comments

தலைமுடிக்கு தினமும் எண்ணெய் வைக்க தேவையில்லை என்று டாக்டர் வந்தனா (தோல் மருத்துவர்) இணையதள பக்கத்தில் சில குறிப்புகளை கூறியுள்ளார். நம்முடைய தலையில் இயற்கையாகவே எண்ணெய் சுரக்கிறது அதுவே போதுமானது என கூறியுள்ளார். அப்படி தினமும் வைத்தோமேயானால் அது அழுக்குகளை ஈர்த்து வைத்துக் கொள்ளும்.இதனால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும் என்றும் அவர் கூறுகிறார். மேலும், வாரத்திற்கு இரண்டு நாட்கள் எண்ணெய் வைத்தாலே போதுமானது என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தினமும் எண்ணெய் வைப்பதால் தலையில் உள்ள […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

  • January 14, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.72 அமெரிக்க டொலராக சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.02 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.94 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு […]

இலங்கை

Clean Sri Lanka திட்டம் ஆரம்பித்த நேரத்தில் தைப்பொங்கலை கொண்டாடுவதில் மகிழ்ச்சி

  • January 14, 2025
  • 0 Comments

இலங்கை மக்களின் நல்வாழ்வு, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை மேம்படுத்துவதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக தூய்மை இலங்கை திட்டம் தொடங்கப்பட்டுள்ள நேரத்தில், தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான தொடர்பு வரலாற்று ரீதியாக வளர்ந்த ஆசிய விழுமியங்களிலிருந்து பிரிக்க முடியாதது என்றும், தைப்பொங்கல் தினத்தில் வெளிப்படுத்தப்படும் விழுமியங்கள் இந்தத் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கும் மக்களுக்கும் நற்காரியங்களைச் செய்யும் பொறுப்பை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் கையடக்க தொலைபேசி சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பா?

  • January 14, 2025
  • 0 Comments

இலங்கையில் கையடக்க தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்கள் சேவை பொதிகளுக்கான கட்டணங்களை அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகயாகியுள்ளது. எனினும் அவ்வாறு வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் சந்தைப்படுத்தல் போட்டிப் பிரிவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட இதனைத் தெரிவித்துள்ளார். இது உண்மைக்குப் புறம்பான தகவலாகும். அவ்வாறான எந்தவொரு விலை அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என சகல தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

Samsung Galaxy S25 சீரிஸ் அறிமுகமாவதற்கு முன்பே கசிந்த விலை விபரம்

  • January 14, 2025
  • 0 Comments

சாம்சங்கின் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஈவென்ட் ஜனவரி 22 அன்று நடைபெற உள்ளது. இந்த ஈவென்ட்-க்கு சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஈவென்ட்-இன் போது நிறுவனம் சமீபத்திய ஃபிளாக்ஷிப் போனை அறிமுகப்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நேரத்தில் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி S25, கேலக்ஸி S25+ மற்றும் கேலக்ஸி S25 அல்ட்ரா ஆகியவற்றை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இருப்பினும், இந்த வெளியீட்டு நிகழ்ச்சிக்கு முன்பே மூன்று போன்களின் விலை விவரங்கள் பற்றிய தகவல்கள் […]

செய்தி விளையாட்டு

சாம்பியன்ஸ் டிரோபியை குறி வைக்கும் கம்மின்ஸ்!

  • January 14, 2025
  • 0 Comments

2025 சாம்பியன்ஸ் டிரோபியானது பிப்ரவரி 19ம் திகதி முதல் தொடங்கி மார்ச் 9 வரை நடைபெறவிருக்கிறது. பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படவிருக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் பிரச்னையால் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் ஹைப்ரிட் முறைப்படி நடத்தப்படவிருக்கிறது. மார்ச் 9-ம் தேதி நடத்தப்படும் இறுதிப்போட்டிக்கு இரண்டு மைதானங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ஒருவேளை இந்தியா […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை மாணவனின் கண்டுபிடிப்பு – மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம்

  • January 14, 2025
  • 0 Comments

இலங்கை மாணவனால் மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரதராஜன் டிலக்சன் என்பவரால் இந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிந்தவூரை சேர்ந்த காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரிக்கு சென்ற வரதராஜன் டிலக்சன் அவர்களால், மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காணும் செயற்திட்டம் (The Brain Tumour Navigation System Project) வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் (Mechatronic Engineering Technology) […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் சூரிய ஒளி, காற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி ஆரம்பம்

  • January 14, 2025
  • 0 Comments

  ஜெர்மனியில் சூரிய ஒளி, காற்று என்பவற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது. ஜெர்மன் அரசாங்கமானது சுற்றுப்புற சூழலை பாதுகாக்கின்றவகையில் இயற்கையின் ஊடாக எரிபொருட்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதாவது காற்று மற்றும் சூரிய ஒளி இருந்து மின்சாரத்தை செயற்கையான முறையில் பெறுவதற்கு துரிதப்படுத்தி வருகின்றது. 2025 ஆம் ஆண்டில் கரியமல வாயுவின் வெளியேற்றத்தை குறைப்பதற்கு ஜெர்மன் அரசாங்கம் சில நிர்ணயங்களை நியமித்து இருந்தது. தற்பொழுது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் ஜெர்மன் அரசாங்கம் […]