ஐரோப்பா

பிரான்சில் மலை உச்சியில் இருந்து விழுந்த பேருந்து : மூவர் பலி, ஆபத்தான நிலையில் பலர் வைத்தியசாலையில் அனுமதி!

  • December 2, 2024
  • 0 Comments

தென்மேற்கு பிரான்சில் சுற்றுலா பயணிகள் பேருந்தொன்று குன்றில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு குழந்தை உட்பட பலர் காயமடைந்துள்ளனர. அன்டோராவிற்கு அருகிலுள்ள போர்டே-புய்மோரன்ஸின் பைரனீஸ் ஸ்கை ரிசார்ட்டுக்கு அருகில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. குறித்த பேருந்தில் 48 பேர் பயணித்துள்ள நிலையில், 8 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு நடவடிக்கைகளில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்பானிஸ் மற்றும் கொலம்பிய நாட்டவர்கள் […]

பொழுதுபோக்கு

ஒரே படத்தில் இரு போட்டி நடிகைகள்… தாராளம் காட்டிய க்ரஷ் நடிகை

  • December 2, 2024
  • 0 Comments

கிரஷ் நடிகை இப்போது கைவசம் சில படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். அதில் அவர் நடித்துள்ள பான் இந்தியா படத்தின் இரண்டாம் பாகம் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த ப்ரமோஷனில் அம்மணி க்யூட்டாக பேசி ரசிகர்களை இம்ப்ரஸ் செய்திருந்தார். அதேபோல் படத்தில் ஒரு பாடலுக்கு அந்த இளம் நடிகையும் ஆடியிருக்கிறார். இந்த இருவருக்குள்ளும் தொழில் ரீதியான போட்டி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ப்ரமோஷன் நிகழ்வில் இருவரும் தோழிகள் போல் சிரித்து பேசியது ஆச்சரியம் தான். […]

இலங்கை

இலங்கையில் காற்றின் தரம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

  • December 2, 2024
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரமானது சாதகமற்ற நிலையில் இருப்பதாக  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி, கேகாலை, காலி உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த நிலைமை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உணர்திறன் உடையவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும் என்றும், அவ்வாறான நிலை ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வாழைச்சேனை பிரதேசம் தற்பொழுது நுவரெலியா போன்று பனி மூட்டமாக காட்சிளிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது […]

இலங்கை

‘தீகதந்து 1’ மரணம் – பிரபல காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளர் கைது

  • December 2, 2024
  • 0 Comments

பிரபல காப்புறுதி நிறுவனமொன்றின் கெக்கிராவ கிளையின் முகாமையாளர் அண்மையில் இலங்கையின் புகழ்பெற்ற ‘தீகதந்து 1’ யானையின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம், கலா வெவ மற்றும் கஹல்ல-பல்லகெல்ல காப்புக்காடுகளுக்கு அடிக்கடி வரும் யானை, சட்டவிரோத மின் வேலியிலிருந்து மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தது. கல்கிரியாகம வனஜீவராசி அலுவலக அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கல்கிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை எதிர்வரும் டிசம்பர் மாதம் […]

இலங்கை

இலங்கை : சொகுசு வாகனங்களையும், வாசஸ்தலங்களையும் தவிர்க்கும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

  • December 2, 2024
  • 0 Comments

அதிக அளவில் பயன்படுத்தப்படாத சொகுசு வாகனங்கள் இருப்பதாகக் கூறிய சபாநாயகர் டாக்டர் ஷோக ரன்வல, பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் குறைந்த எரிபொருள் திறன் காரணமாக சொகுசு வாகனங்களைப் பயன்படுத்த மறுப்பதாக கூறியுள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டுள்ள அவர், குறைந்த எரிபொருள் திறன் கொண்ட சொகுசு வாகனங்கள் இலங்கைக்கு பொருத்தமற்றவை. இதுவரை பாராளுமன்றத்தினூடாக எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சொகுசு வாகனங்களை கோரவில்லை என தெரிவித்தார். “எரிபொருளைச் சிக்கனப்படுத்தாததாலும், இந்த நாட்டிற்குப் பொருந்தாததாலும் பயன்படுத்தப்படாமலேயே ஏராளமான சொகுசு […]

ஐரோப்பா

மூன்றாம் உலகபோர் எப்போது துவங்கும்? : நிபுணர்கள் கூறும் செய்தி!

  • December 2, 2024
  • 0 Comments

தற்போது உலக மக்கள் மத்தியில் மூன்றாம் போர் பற்றிய அச்ச உணர்வு மேலோங்கி இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. அண்மை காலமாக அணுவாயுத மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த அச்சம் மேலும் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் நிபுணர்கள் சிலர் மூன்றாம் உலகபோரானது ரஷ்யா தனது அண்டை நாடு மீது போர் தொடுக்க ஆரம்பித்த 2022 லேயே ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்பு நிபுணர் மார்க் டோத் மற்றும் முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி கர்னல் ஜொனாதன் ஸ்வீட் ஆகியோர் MailOnline […]

ஆசியா

பாகிஸ்தானில் நிலவும் இனவாத சண்டை ; 130-ஐ தாண்டிய பலியானோர் எண்ணிக்கை

  • December 2, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள ‘குர்ராம்’ மாவட்டத்தில் மோசமான இனவாதச் சண்டைகள் தொடர்கின்றன.சென்ற வாரம் உத்தேசச் சண்டைநிறுத்தம் நடப்புக்கு வந்தபோதும், சண்டைகள் நீடிப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 130ஐத் தாண்டிவிட்டது. பிரச்சினைக்குத் தீர்வுகாண அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள ‘குர்ராம்’ மாவட்டம், பல்லாண்டுகளாக இனவாதப் பதற்றங்களுக்கு மையப்பகுதியாக இருந்துவந்துள்ளது. சன்னி, ஷியா இனத்தவருக்கு இடையே நடந்த கடும் சண்டைகளில் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து, சென்ற மாதம் புதிய கலவரங்கள் […]

பொழுதுபோக்கு

மிர்ச்சி சிவாவின் BMW காருக்கு நடந்தது என்ன? சுவாரசிய தகவல்

  • December 2, 2024
  • 0 Comments

2001 ஆம் ஆண்டு திரைக்கு வந்த 12பி படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மிர்ச்சி சிவா. நடிகர் மட்டுமின்றி டயலாக் ரைட்டராகவும் இருந்துள்ளார். சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக ரேடியோ மிர்ச்சியில் ரேடியோ ஜாக்கியாக (ஆர்ஜே) பணியாற்றியுள்ளார். அதன் பிறகு தான் சினிமாவில் கால் பதித்தார். இப்போது வருடத்திற்கு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 12பி படத்துக்கு பிறகு கமல் ஹாசன் நடித்த ஆளவந்தான், விசில், சென்னை 600028, சரோஜா, தமிழ் படம், வா, பதினாறு, […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

அலெப்போ நகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் – நட்பு நாடுகளின் ஆரதவை நாடியுள்ள சிரியா

  • December 2, 2024
  • 0 Comments

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது டிசம்பர் 1ஆம் திகதி அதிகாலை ரஷ்யாவும் சிரியாவும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின. சிரியாவின் வடமேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. சிரியாவின் அலெப்போ நகரைக் கிளர்ச்சியாளர் அமைப்பான ஹயாத் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பு அண்மையில் கைப்பற்றியது.இந்த அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக சிரியா வகைப்படுத்தியுள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கிலிருந்து அலெப்போ நகரை அந்நாட்டுப் படைகள் இழந்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. கிளர்ச்சியாளர்களை […]

தமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கிய பெஞ்சல் புயல் – மின்சாரம் தாக்கி மூவர் மரணம்

  • December 2, 2024
  • 0 Comments

இந்தியாவின் தென் பகுதியை உலுக்கிய பெஞ்சல் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளார். மூவரும் சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் பேரிடர் நிர்வாக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் இம்முறைய புயல் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தவில்லை என்று அதிகாரிகள் கூறினர். வெள்ளம் பெருகி மரங்கள் விழுந்தாலும் அஞ்சிய அளவுக்குச் சேதம் இல்லை என கூறப்படுகின்றது. மணிக்குச் சுமார் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசியது. புயல் மெதுவடையும் என்று […]